Header Ads



5 நாட்களுக்கு மின் வெட்டு இல்லை, 10 மணித்தியால மின்வெட்டில் உண்மையுமில்லை


பண்டிகை காலத்தை முன்னிட்டு சில நாட்களுக்கு மின்வெட்டை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சார அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.


அதன்படி, வரும் 24, 25, 26 ஆகிய மூன்று நாட்களில் மின்வெட்டு மேற்கொள்ளப்படாது என அமைச்சர் அறிவித்துள்ளார்.


இதேவேளை, 2022 டிசம்பர் 31 மற்றும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதிகளில் மின்வெட்டு மேற்கொள்ளப்படாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


இதேவேளை, ஜனவரி மாதத்தில் 2 மணித்தியாலங்கள் மற்றும் 20 நிமிடங்களுக்கு மாத்திரமே மின்வெட்டினை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2

2023ஆம் ஆண்டு முதல் தினமும் 10 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி கொள்வனவு செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக ஜனவரி மாதம் முதல் தினமும் 10 மணிநேரம் மின்சாரம் தடைபடலாம் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் நேற்றைய தினம் (20) தெரிவித்திருந்தது.


குறித்த கருத்தினைவெளியிட்ட மின்சார பொறியியலாளர் சங்கத்தின் தலைவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையினை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததாக இன்று விஷேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அமைச்சர் குறிப்பிட்டார்.


மின் உற்பத்திக்கான நிலக்கரி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக அடுத்த சில நாட்களில் 300 மெகாவோட் மின் உற்பத்தியை இழக்கும் அபாயம் உள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் நேற்று தெரிவித்தது.

No comments

Powered by Blogger.