Header Ads



4 மணித்தியால போராட்டம் தோல்வி - மண்ணில் புதைந்த 2 உயிர்கள்


கண்டி, துனுவில கணபதிவத்த பிரதேசத்தில் நேற்று காலை பெய்த கடும் மழையின் போது வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.


ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 வயதுடைய ஆயிஷா நிஷானி விதாரண மற்றும் 16 வயதுடைய சித்தும் சாரங்க விதாரண ஆகிய இரு பிள்ளைகளே உயிரிழந்துள்ளனர்.


விபத்தின் போது வீட்டில் தாய், தந்தை மற்றும் மூன்று பிள்ளைகள் இருந்துள்ளனர். காயமடைந்த தாய், தந்தை மற்றும் 12 வயது சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இராணுவம், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளின் கூட்டு முயற்சியின் பின்னர் மண்ணில் சிக்கிய சிறுவர்கள் வீட்டின் இடிபாடுகளுக்கு இடையில் கண்டுபிடிக்கப்பட்டனர். கண்டெடுக்கும் போது இரண்டு பேரும் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


“பிரதேச மக்கள் அனைவரும் சேர்ந்து மண்ணை வெளியே எடுத்தோம். மூன்று பேரும் மண்ணில் புதைந்த நிலையிலேயே இருந்தனர். முதலில் ஒருவர் வெளியே எடுக்கப்பட்டார். அவரே மூன்றாவது மகளாகும். அவர் சுயநினைவுடன் இருந்தார், நாங்கள் அவரை மருத்துவமனைக்கு அனுப்பினோம், ஏனைய இருவரை வெளியே எடுக்கும்போது, உயிரிழந்து காணப்பட்டனர். ஒரு பிள்ளையை வெளியே எடுக்க 4 மணித்தியாலங்களானது” என அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். TW


No comments

Powered by Blogger.