Header Ads



உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த 10 பில்லியன் ரூபா தேவை


உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா செலவாகும் என எதிர்பார்ப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 


இதற்கான ஒதுக்கீட்டிற்கு இம்முறை வரவு செலவு திட்டத்தினூடாக அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டார்.


இதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இந்த மாதத்தின் இறுதி வாரத்திற்குள் வௌியிட  தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.


தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ​நேற்று (08) கூடி இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அடுத்த வருடம் மார்ச் 20 ஆம் திகதியளவில் உள்ளூராட்சி மன்றங்களை அமைப்பதற்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


வேட்புமனு ஏற்கப்பட்டதன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படவுள்ளது.


இதேவேளை, தேர்தல்களை காலம் தாழ்த்தாது விரைவில் நடத்த வேண்டும் என PAFFREL அமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

No comments

Powered by Blogger.