Header Ads



கனடாவில் 1 மில்லியன் வேலைவாய்ப்புகள் - திறமையானவர்களுக்கு அரிய வாய்ப்பு என அந்நாட்டு அமைச்சர் அறிவிப்பு


கனடாவில் இன்னும் 1 மில்லியன் வேலைவாய்ப்புகள் நிரப்பப்படாமல் இருப்பதாகவும் திறமையான புலம்பெயர்ந்தோருக்கு இது அரிய வாய்ப்பு எனவும் கனேடிய வீட்டுவசதி அமைச்சர் அகமது ஹசென் அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டின் கட்டுமானத்துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும், குடியிருப்புகளின் தேவை உயர்ந்துள்ளதால் திறமையான புலம்பெயர்ந்தோருக்கு இது அரிய வாய்ப்பு எனவும் அமைச்சர் ஹசென் குறிப்பிட்டுள்ளார்.


தற்போது வரையில் 1 மில்லியன் வேலைவாய்ப்புகள் கனடாவில் நிரப்பப்படாமல் உள்ளது என குறிப்பிட்டுள்ள அமைச்சர் ஹசென், இதனால் கனடாவுக்கு புலம்பெயர்ந்தோர்கள், தொழில் திறமை மிகுந்த புலம்பெயர்ந்தோர் தேவை எனவும், நிரப்பப்படாமல் உள்ள வேலை வாய்ப்பை நிரப்பவும், அத்துடன் பொருளாதாரத்தை அதிகரிக்கவும் எங்களுக்கு உதவ முன்வாருங்கள் என அழைப்பு விடுத்துள்ளார்.


அதிக தொழிலாளர்கள் தேவை என்பதால், கனேடியர்களுக்கு குடியிருப்புகளின் தேவை இருப்பதால், வந்து எங்களுக்கு உதவுங்கள் என அமைச்சர் ஹசென் கோரிக்கை வைத்துள்ளார்.


முன்னதாக 2025 ஆம் ஆண்டுக்குள், ஆண்டுக்கு 500,000 பேர் கனடாவுக்கு வருவதை பெடரல் அரசாங்கம் எதிர்பார்ப்பதாக குடிவரவு அமைச்சர் ஷான் ஃப்ரேசர் அறிவித்திருந்தார்.


ஆனால், புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பால் குடியிருப்பு பிரச்சனையும் அரசாங்க சேவைகளை பெறுவதில் சிக்கலும் ஏற்படும் என பெரும்பாலான கனேடிய மக்கள் கவலை தெரிவித்திருந்தனர்.


புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பதால், வீட்டுவசதி, சுகாதார மற்றும் சமூக சேவைகளுக்கான அதிகப்படியான தேவை ஏற்படும் என கனேடிய மக்கள் குறிப்பிட்டிருந்தனர்.

1 comment:

  1. கனடா நாட்டு அமைச்சர் தெரிவித்தது போல கனடா நாட்டில் உள்ள ஒரு மில்லியன் வேலைவாய்ப்புகளும் வழங்கப்பட முக்கியமான மூன்று நிபந்தனைகள் இருக்கின்றன. முதலாவது , விண்ணப்பிக்கும் குறிப்பிட்ட நபர் ஏற்கனவே கனடாவுக்கு சென்று அங்கு வசிக்க வேண்டும். இரண்டாவது அவர் குறிப்பிட்ட துறையில் அவர் கனடாவில் பெற்ற பயிற்சிச் சான்றிதழ் அவரிடம் இருக்க வேண்டும். மூன்றாவது வௌிநாட்டவர்கள் பணியாற்றுவதற்கும் அங்கு குடியேறுவதற்கும் அந்த நாட்டு மக்கள் அவர்களுடைய கண்டனத்தைத் தெரிவிக்கின்றனர். கனடாவில் அடிப்படை வசதிகள், தேவைகளைப் பெற்றுக் கொள்வதில் கனடா நாட்டவர்களுக்கு பல்வேறு சிரமம் இருப்பதாகவும் அதற்குக் காரணம் வௌிநாட்டவர்கள் வருகையினால் அவர்களுடைய சலுகைகள் , உரிமைகளைப் பெறுவதில் சிக்கல்கள் இருப்பதாகவும் அவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். எனவே இந்த தொழிலைப் பெறுவதில் இந்த மூன்று சவால்களையும் வெற்றி கொள்வது மிகவும் கடினமான, சாத்தியமில்லாதவைகள் என்பதை இதனைப் பார்த்து கனடா செல்ல நாடுபவர்கள் மிகவும் அவதானத்துடன் செயல்பட வேண்டும். ஒரு படுகுழியில் விழுந்தவர்கள், மற்ற பாதாளத்தில் விழும் ஆபத்துக்களை மிகவும் யோசனையுடன், உரியவர்களின் ஆலோசனைகளுடன் செயற்பட்டால் ஓரளவு தப்ப வாய்ப்புகள் கிடைக்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.