Header Ads



பொதுஜன பெரமுன பிரதிநிதிகளை சுதந்திரக்கட்சியில் இணையுமாறு அழைப்பு


 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபை பிரதிநிதிகளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணையுமாறு அந்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர பகிரங்கமான அழைப்பை விடுத்துள்ளார்.


பொதுஜன பெரமுனவுக்கு அரசியல் கட்சி என்ற அடிப்படையில் தொடர்ந்தும் மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்காது என்பதால்,அந்த கட்சியின் பிரதிநிதிகள் இணைவதற்கு பொருத்தமான கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எனவும் அவர் கூறியுள்ளார்.


கண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர், செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.



பொதுஜன பெரமுனவின் பிரிநிதிகள் சிலர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த போது , அவர்களை சுதந்திரக்கட்சியில் இணையுமாறு கோரிக்கை விடுத்த போதிலும் அதற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை.


எதிர்காலத்தில் தேர்தல் ஒன்றில் வெற்றி பெற வேண்டும் என அவர்கள் எதிர்பார்த்தால், ஐக்கிய மக்கள் சக்தியை விட, பொதுஜன பெரமுனவின் தாய் கட்சியான சுதந்திரக்கட்சியில் இணைவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.


அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கொள்கைக்கு முரணாக அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டவர்கள், நவ ஸ்ரீலங்கா கட்சியின் ஆலோசகர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


இது தவறானது எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு தலைமை தாங்கவில்லை என்பதால், சுதந்திரக்கட்சியின் மாற்றங்கள் பற்றி பேச அவருக்கு என்ன உரிமை இருக்கின்றது எனவும் தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பியுள்ளார். TW

No comments

Powered by Blogger.