Header Ads



இலங்கையின் மிகப்பெரிய மாணிக்கக்கல்லை வாங்கப் போவது யார்..? சுவிசிலிருந்து டுபாய் வருகிறது


இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட நீல நட்சத்திர சபையர் மாணிக்கக்கல் கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வா தெரிவித்துள்ளார்.


சர்வதேச இரத்தினம் மற்றும் நகை கண்காட்சி 2023 இன் முதல் பதிப்பை அறிவிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.


இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.


மேலும் தெரிவிக்கையில், நீல மாணிக்கக்கல் கொத்து இன்னும் விற்பனை செய்யப்படவில்லை.


கடந்த ஆண்டு இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட 503.2 கிலோகிராம் எடையுள்ள நட்சத்திர சபையர் கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளது.


இது 2022 பெப்ரவரி 24ஆம் திகதியன்று சுவிட்சர்லாந்தில் உள்ள ஆய்வகத்தால், உலகின் மிகப்பெரிய சபையர் மாணிக்கக்கல்லாக அங்கீகரிக்கப்பட்டது.


எனினும் இந்த மாணிக்கக்கல்லை வாங்குபவரை நாங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. எனவே அதனை சுவிட்சர்லாந்தில் இருந்து துபாய்க்கு மாற்ற முடிவு செய்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். TW

No comments

Powered by Blogger.