Header Ads



ராணுவ வீரர்களின் நேர்மை, மகிழ்ந்து போன சுற்றுலாப் பயணி


ரூ. 700,000 பெறுமதியான வெளிநாட்டு நாணயம் மற்றும் கமரா ஒன்று அடங்கிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரின் கைப்பை பொலன்னறுவை மாவட்டத்தின் கிரிதலேயில் இலங்கை இராணுவ அதிகாரி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டு திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இராணுவத்தினரின் கூற்றுப்படி, ஞாயிற்றுக்கிழமை (13) கிரிதலேயில் உள்ள அவுக்கண புத்தர் சிலை வளாகத்திற்கு அருகில் இந்தக் கைப்பையை 2 இலங்கை இராணுவப் பொலிஸ் பிரிவின் (SLCMP) கோப்ரல் NEDP நாணயக்கார கண்டுபிடித்துள்ளார்.


2 SLCMP தலைமையகத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்ததில், ரூ. ரூ7 லட்சம் வெளிநாட்டு நாணயம், ஒரு கனொன் கமரா, ரூ. 300,000, பெருவில் வசிப்பவரின் பாஸ்போர்ட், ஒரு பவர் பேங்க் மற்றும் இரண்டு ஏடிஎம் கார்டுகள் கைப்பையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன.


அறிவிக்கப்பட்டதையடுத்து, கைப்பையின் உரிமையாளர் 2 SLCMP தலைமையகத்தில் இருந்து அனைத்து மதிப்புமிக்க பொருட்களுடன் அதைப் பெற்றுக்கொண்டுள்ளார்.


 -சி.எல்.சிசில்-


No comments

Powered by Blogger.