Header Ads



கத்தார் உலகக் கோப்பையில் சீன வித்தை.


- SHAF NM -


கத்தாரில் நடைபெற்று வரும் #FIFA உலக கிண்ணத்தில், அரங்க கட்டுமானம் மற்றும் பிராண்ட் மார்க்கெட்டிங் முதல் சின்னம் தயாரிப்பு வரை பின்னணியில் நின்றது சீன நிறுவனங்களாகும் என்பது எம்மில் எத்தனை பேருக்கு வெளிச்சம்.


நவம்பர் 22 அன்று மாலை, 92,000 இருக்கைகளுடன் லுசைல் எனும் பிரமாண்டமான அரங்கத்தில் நுற்றுகணக்கான உலகப்புகழ் நட்சத்திரங்களுடன் கோலாகலமாக உலகக் கோப்பை அறிமுக விழா கண்கவர் வண்ணம் அரங்கேறியதை கண்டுகளித்திருப்பீர்கள்.

அங்குதான் அர்ஜென்டினா மற்றும் சவுதி அரேபியா இடையேயான போட்டி நடந்தேறியது. 


இந்த பிரமாண்ட அரங்கம் சீன கட்டுமான நிறுவனமான சைனா ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்பரேஷன் (இன்டர்நேஷனல்) லிமிடெட் துணையுடன், கத்தாரின் உட்கட்டுமான பணிகளை 1970 களில் இருந்து மேற்கொள்ளும் நிறுவனமான HBK எனும் கத்தார் அரச பரம்பரைக்கு சொந்தமான நிறுவனத்துடன் இணைந்து கட்டியெழுப்பப்பட்டதாகும்.


சைனா ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்பரேஷன் (இன்டர்நேஷனல்) லிமிடெட் 2016 இல் லுசைல் மைதானத்தை உருவாக்குவதற்கான விலைமனுகோரலை தனதாக்கிகொண்டது.

FIFA உலகக் கோப்பை ஆடுகளத்தை உருவாக்க ஒரு சீன நிறுவனம் முதன்மை ஒப்பந்தக்காரராக பணியாற்றியது இதுவே முதல் முறையாகும்.



கத்தாரின் தலைநகரான தோஹாவிலிருந்து வடக்கே 15 கிலோமீட்டர் தொலைவில் தங்கக் கிண்ண வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கம், கத்தாரின் மிகப்பெரிய விளையாட்டு மைதானமாகவும், FIFA உலகக் கோப்பை 2022க்கான இன்றியமையாத அரங்கமுமாகும்.

இங்குதான் அரையிறுதி, இறுதிப் போட்டி மற்றும் உலகக் கோப்பையின் நிறைவு விழா போன்ற முக்கியமான நிகழ்வுகள் இடம்பெறவிருக்கின்றன.


 பிற நாடொன்றில் சீன நிறுவனங்களால் கட்டப்பட்ட சர்வதேச கால்பந்து மைதானங்களில் இந்த மைதானம் மிகவிசாலமானதும் மற்றும் மிகவும் மேம்பட்ட நவீன தொழில்நுட்பத்துக்கு எடுத்துக்காட்டுமாகும்


உலகின் மிக அகலமான இரட்டை சவ்வு இழுவிசை அமைப்பை  (double membrane tensile structure) கொண்டு அமைக்கப்பட்டுள்ள

லுசைல் ஸ்டேடியம் 278 மீட்டர் கூரை கேபிள் இடைவெளியைக் கொண்டுள்ளது.  

இது கத்தாரின் சுட்டெரிக்கும் கோடை நாட்களில் வெப்பத்திலிருந்து பாதுகாப்பை உறுதி செய்து குளிர்ந்த காற்றோட்டத்தை ஏற்படுத்தும் நோக்கில் இரட்டை முகப்பு அமைப்பை மையப்படுத்தி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மேலும் கால்பந்து மைதானம் மற்றும் பார்வையாளர் பகுதி குளிர்ச்சியாகவும் வசதியாகவும் இருக்க, அரங்கத்திற்கு வெளியே தனித்தனி குளிரூட்டும் நிலையங்கள் பொருத்தப்பட்டு, பார்வையாளர் இருக்கைகளுக்கு கீழே உள்ள காற்றோட்ட குழாய்கள் வழியாக குளிர்ந்த காற்றுகளை அரங்கத்திற்குள் அனுப்புகின்ற பிரமிக்கும்வகையிலான தொழில்நுட்பம் கையாளப்பட்டுள்ளது.


 2022 கத்தார் உலகக் கோப்பை வாரியத்தின் உச்சக் குழுவின் பொதுச் செயலாளர்

ஹசன் அல் தவாடி, இந்த சிக்கல் நிறைந்த அமைப்பு தொழில் கட்டுமான துறையில் சீன நிறுவனங்களின் அதியுயர் தொழில்நுட்பவிருத்தியயும் சேவைத் திறனையும் நிரூபிக்கிறது என்று கூறினார். 


 உலகக் கோப்பை நிகழ்வின்போது, 

பார்வையாளர்கள், அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு மைதானங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு இடையே போக்குவரத்து சேவைகளை வழங்க சீன உற்பத்தியான புதிய மின்சார பேருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.  

உலகக் கிண்ணப் போட்டியின் போது போக்குவரத்துத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 1,500 பேருந்துகளை சீனாவிலிருந்து கத்தார் இறக்குமதி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது இவற்றில் 888 பேருந்துகள் முழுமையான மின்வலுவில் இயங்குபவையயாகும்..


 ஒரு பெரிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வில் சீன பேருந்துகளை இவ்வளவு பெரிய அளவில் பயன்படுத்தியது இதுவே முதல் முறையாகும், 

அது மட்டுமன்றி உலகக் கோப்பை ஒன்றில் மிககூடிய தூய மின்சார பேருந்துகளை பயன்படுத்தியதும் இதுவே முதல்தடவையாகும்.


 2020 ஆம் ஆண்டில், கத்தார் உலகக் கோப்பைக்கான சேவை வாகனங்களை வழங்க சீன உற்பத்தியாளர் யோடாங்(Yutong) தேர்ந்தெடுக்கப்பட்டது. 

இந்நிறுவனம் தனது பேருந்துகளின் இயந்திரங்கள் கத்தாரின் நிலபாங்குக்கு தாக்குப்பிடிக்கும் வண்ணம் மணல் மற்றும் அதியுயர் வெப்பநிலையில் இருந்து பாதுகாக்கும் சாதனங்களுடன் மீள்வடிவமைக்கபட்டு திரவ-கூலிங் பவர் பேட்டரிகளைப் பயன்படுத்தி பேருந்துகளில் உள்ள குளிரூட்டிகளுக்கு ஸ்மார்ட் வெப்பநிலை சீராக்கும் வழிமுறையைப் பயன்படுத்தியது.


 இந்த ஸ்மார்ட் சூழல் மாசிபடுத்தாத வாகனங்கள் உள்ளூர் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.

மேலும் உலகக் கோப்பைக்குப் பிறகு நாட்டின் பொதுப் போக்குவரத்து அமைப்பின் முக்கிய அங்கமாக கத்தாரில் இவை இயங்கும் என நம்பப்படுகிறது .


தோஹாவிற்கு மேற்கே 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பாலைவனத்தில், 1,400 கால்பந்து மைதானங்களுக்கு சமமான மொத்த பரப்பளவைக் கொண்ட ஒரு பரந்த ஒளிமின்வலு (PV) நிலையம் ஒன்று 

ஸ்தாபிக்கபட்டுள்ளது.

இது சீன தொழில்நுட்பங்களின் மீழ்சூழற்சி சக்தி பாவனையில் ஆதிக்கத்தை மேற்கோள் காட்டி நிற்கும் ஒரு நிர்மானமாகும்.

 PowerChina Guizhou Engineering Co., Ltd. ஆல் கட்டப்பட்ட, 800MW அல் கர்சா சூரிய மின்வலு நிலையத்தில் 2 மில்லியன் சூரிய மின்கல பேனல்கள் உள்ளன,

ஒவ்வொரு ஆண்டும் கத்தாருக்கு 1.8 பில்லியன் கிலோவாட் மணிநேர சுத்தமான சூழல்மாசற்ற மின்சாரத்தை உற்பத்தி செய்ய இந்த நிலயத்தால் முடியும்.  

அதாவது கடும் கோடையில் முழுமையான வீடும் குளிரூட்டி /A/C 

பாவனையுள்ள கத்தாரின் மூன்று இலட்சம் வீடுகளுக்குறிய மின்சார தேவையை பூர்த்திசெய்ய முடியும் .

இது ஒரு ஆண்டுக்கு மின்சார நுகர்வினால் வெளியிடப்படும் 900,000 டன்னால் CO2 உமிழ்வைக் குறைக்கும்.


 மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானத்தின் போது, சீன நிறுவனம் கத்தார் நாட்டின் இயற்கை கட்டுக்கோப்புக்கு தீங்கு விளைவிக்காத வண்ணம் விலங்குகள் மற்றும் , தாவரங்களுக்கான விரிவான இடமாற்றத் திட்டங்களை வடிவமைத்து, உள்ளூர் சூழலியல் மீதான தாக்கங்களைக் இயன்றவரை குறைத்து

நிர்மானபணிகளை மேற்கொண்டது .


 சீன நிறுவனங்கள் உலகக் கோப்பைக்கான அநுசரனைக்கான ஒப்பந்தங்களில் கிட்டத்தட்ட $1.4 பில்லியன்களை சீன நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன, 

இது அமெரிக்க போன்ற புகழ்பெற்ற சர்வதேச நிறுவனங்களை கொண்ட நாடுகளின் செலவினங்களை விஞ்சி உலக நாடுகளுக்கு மத்தியில் முதலிடத்தை சீனா கைப்பற்றியுள்ளது.

 

சீனாவின் Yiwu எனும் அனைத்து விளையாட்டு உபகரண சங்கத்தின் மதிப்பீட்டின்படி, 

சிறிய பொருட்களின் உலகின் மிகப்பெரிய மொத்த சந்தையான, 70 சதவீத உலகக் கோப்பை சார் தயாரிப்புகள் சீன தயாரிப்புகளாகும் .


இவை இவ்வாரிருந்தும் சீனாவின் இந்த மாபெரும் பங்களிப்பு பற்றி மேற்கு ஊடங்கள் இருட்டடிப்பு செய்த நோக்கம் என்ன என்பது யாரும் அறிந்த இரகசியமே. 

மேலும் BBC போன்ற மேற்கு ஊடகங்கள் இந்த உலககிண்ண ஆரம்ப நிகழ்வு ஒளிபரப்பாது ஓரங்கட்ட விளைந்ததும் கத்தாரில் மனித உரிமை மீறப்படுவதாக புதிதாக உலக அரங்கில் குற்றம்சாட்ட கிளம்பியிருப்பதும் அவர்கள் கட்டரின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியினால் மட்டுமல்ல, கத்தார் சீன வியாபார நட்புறவு ஓங்கிசெல்வதும் ஒரு காரணமாகும்.

No comments

Powered by Blogger.