Header Ads



மத்திய வங்கியை மீண்டும் கொள்ளையடிப்பதற்கு திட்டம்


இந்நாட்டின் மத்திய வங்கி பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்டு,  கொள்ளையடிக்கப்படும் வரை காத்திருந்த சிலர்,இம்முறையும் மத்திய வங்கியை கொள்ளையடியக்க முடியாமல் போகும் போது,ஏதாவதொரு வகையில் தாம் சார்ந்த கையாட்களை நியமிக்க முயல்வதாகத் தெரிகிறது எனவும், இதன் விளைவாக,  மத்திய வங்கியின் ஆளுநர் அடங்களாக மத்திய வங்கி மீது குற்றம் சுமத்தப்படுவதான போலிச் சாட்டுகளை சுமத்திப்பார்ப்பதாகவும்  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று(19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


மத்திய வங்கியை மீண்டும் கொள்ளையடிப்பதற்கு,அந்தப் பணிக்குப் பொருத்தமான உற்ற நட்பு வட்டார கையாட்கள் கும்பலை நியமிப்பது தங்களுக்கு இலகுவானது என அவர்கள் அறிந்து வைத்திருப்பதாக தெரிவித்த  எதிர்க்கட்சித் தலைவர்,தேசிய பட்டியல் ஊடாக பாக்கியத்தால் நியமிக்கப்பட்ட சிலரும் இதற்கு துணைபோவதாகவும் அவர் தெரிவித்தார்.


மத்திய வங்கி கொள்ளையடிப்பு தொடர்பில் தினேஷ் குணவர்தன தெரிவித்த கருத்தை Replay செய்யுமாறு பிரதமரிடம் கேட்டுக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர், தற்போது இந்நாட்டின் பொருளாதாரத்தை வங்குரோத்தடையச் செய்ய முன்நின்ற பிரதான காரணகர்த்தாக்கள் சகலரும் செம்கம்பள வரவேற்புக்கும் மேலாக மிகவும் பாதுகாப்பாக கரைசேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


பொருளாதாரத்தை வக்குரோத்தடையச் செய்த ஒருவர் புத்தகம் எழுதுகிறார் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,பொருளாதாரத்தை வக்குரோத்தாக்கிய மற்றொரு நபர் சாம்பலிலிருந்து மீண்டும் எழ முயற்சிப்பதாகவும்,இன்னும் சிலர் அவ்வாறு எழ முயற்சிப்பவர்களுக்கு ஒட்சிசன் வழங்குவதாகவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.