Header Ads



தேநீர் விருந்தை தவிர்க்குமாறு ஜனாதிபதி யோசனை


பாராளுமன்றத்தில் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் எதிர்வரும் 14 ஆம் திகதி அதிதிகளுக்கான சம்பிரதாயபூர்வ தேநீர் உபசாரம் இம்முறை நடைபெறமாட்டாது.


வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட விசேட அதிதிகளுக்காக வழமையாக சம்பிரதாயபூர்வமாக நடத்தப்படும் தேநீர் விருந்துபசாரத்தை இம்முறை நடத்த வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற பிரதானிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையை கவனத்திற் கொண்டே ஜனாதிபதி இத்தகைய தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 14ஆம் திகதிஅடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து வரவு செலவுத் திட்ட விசேட உரையை ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


லோரன்ஸ் செல்வநாயகம்

No comments

Powered by Blogger.