Header Ads



கடனுக்காக எதிர்பார்த்திருந்த, அரசாங்கத்திற்கு ஏமாற்றம்


இலங்கைக்கு கடன் வழங்கிய தரப்பினருடன் முன்னெடுக்கப்பட்டிருந்த பேச்சுவார்த்தைகள் கைகூடாத நிலையில், சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவிருந்த கடன் உதவி, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை தாமதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழுவின் அடுத்த சந்திப்பு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இடம்பெறவுள்ளமை இதற்கு காரணமாக அமைந்துள்ளது.


அதுவரையான காலப்பகுதியினுள் இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்திருக்க வேண்டும் என்பதுடன், அதன் முன்னேற்றத்தை இந்த சந்திப்பில் அறிவித்து, அனுமதியைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


அவ்வாறு இடம்பெறாவிடின், இந்த உதவித் தொகையைப் பெறுவதில் மேலும் கால தாமதம் ஏற்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. சர்வதேச நாணய நிதி அதன் நிலைப்பாட்டில் தொடர்ந்து இருக்கின்றது. அதில் கடன் வாங்கும் தகுதிநிலை இலங்கைக்கு ஒருபோதும் கிடைக்கமாட்டாது என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். பொதுமக்களின் சொத்துக்களைக் களவாடுவதும் கொள்ளையடிப்பதையும் நோக்கமாகக் கொண்டு ஆட்சி செய்யும் பெயரில் மக்களை ஏமாற்றுபவனால் சட்டம்,நீதி, நியாயம் பேசுவதில் பயனில்லை என்பது தான் IMF அதிகாரிகளும் இலங்கை அரசின் கள்வர்களுக்குமிடையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் ஒருபோதும் வெற்றியடைய வாய்ப்புகள் அறவேஇல்லை. இதனை அறிந்த இலங்கை வாலிபர்கள் கடந்த 7 -8 மாதங்களாக system change என்ற பெயரில் போராடும் போது இந்த அராஜகம் கொண்ட அரசாங்கம் அதன் தலைவர்களையும் அதில் ஈடுபட்டவர்களையும் பல்வேறு போலிக்குற்றச்சாட்டுகளுடன் சிறையில் அடைத்து அவர்களின் உணர்வுகளைக் கட்டுப்படுத்தலாம் எனக்கனவு காண்கின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.