Header Ads



"பைத்தியக்கார நாயைக் குளிப்பாட்டுவதற்கு ஒப்பான கடினமான பணி"


தேர்தலை நடத்துவதற்கு அரசியலமைப்பின் பிரகாரம் எந்தவித தடையும் இல்லை எனவும், ஒரே ஒரு தடையே இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.


தேர்தல் முடிவு தொடர்பிலான சந்நிதியில் தாம் தோல்வியடைய முடியும் என்ற அரசாங்கத்தின் மெய்சிலிர்க்க வைக்கும் அச்சமே இதற்கு தடையாகவுள்ளதாகவும்,எனவே அரசாங்கத்தை தேர்தலுக்கு அழைத்துச் செல்வது பைத்தியக்கார நாயைக் குளிப்பாட்டுவதற்கு ஒப்பான கடினமான பணி எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


பாராளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் நாட்டை தவறாக வழிநடத்த வேண்டாம் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,தேர்தல் நடத்துவது தொடர்பாக அரசியலமைப்பின் பிரகாரமமைந்த ஷரத்துகளைக் கோடிட்டுக் காட்டினார்.


பாராளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் பிரதமர் மக்களையும் நாட்டையும் தவறாக வழிநடத்தும் அறிவிப்பொன்றை வெளியிட்டதாகவும், இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான அறிவிப்பு எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. இந்த ஆசாமியின் உளரல்களை நுணுக்கமாக அவதானித்தால் இவருக்கு புத்தியுள்ள மக்கள் யாரும் எந்த வாக்கையும் வழங்கமாட்டார்கள். நாட்டின் அடிப்படைப் பிரச்சினைகளை மணித்தியாலக்கணக்கில் வம்புளப்பதன் மூலம் தீர்க்கமுடியுமென இவர் கனவுகாண்கின்றார்.அதன் விளைவை மிக விரைவில் அனைவரும் அறிந்து கொள்வார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.