Header Ads



அவுட்டானது கட்டார் - 'தோல்வியாகவோ ஏமாற்றமாகவோ கருதக்கூடாது' என அறிவிப்பு


இம்முறை கால்பந்து உலகக் கிண்ணப் போட்டித் தொடரை நடாத்தும் நாடான கட்டார் இந்த ஆண்டு கால்பந்து உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறிய முதல் அணியாக அறிவிக்கப்பட்டுள்ளது.


நேற்று (25ம் திகதி) இடம்பெற்ற செனகல் அணிக்கு எதிரான போட்டியில் மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை தொடர்ந்து போட்டியில் இருந்து கட்டார் அணி வௌியேறியுள்ளது.


போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் ஈக்வடாரிடம் கட்டார் தோல்வியடைந்தது.


அதன்படி, போட்டித் தொடரில் ´ஏ´ பிரிவின் கீழ் போட்டியிட்ட அவர்கள் இதுவரை பங்கேற்ற இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளனர்.


2


‘தோல்வியாகவோ ஏமாற்றமாகவோ கருதக்கூடாது’

கத்தார் அணி உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெளியேறுவது உறுதியாகிவிட்ட நிலையில், இதை தோல்வியாகவோ ஏமாற்றமாகவோ கருதக்கூடாது என்று அந்த அணியின் மேலாளர் ஃபெலிக்ஸ் சான்செஸ் கூறியுள்ளார்.


போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அணிகளுக்குப் போட்டியளிக்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கமாக இருந்தது” என்று கூறினார். 


“சிறப்பான ஆட்டத்தை வழங்கும் வகையில் பல மாதங்களாக தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டிருந்தோம். ஆனால் சில நேரங்களில் நாம் எதிர்பார்ப்பது போல போட்டி நடக்காது. எதிரணியின் ஆட்டத்தைப் பொறுத்தும் அது இருக்கும். நாங்கள் எங்களது உயர்ந்த அளவு ஆட்டத்தை ஆடவில்லை” என்று அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.