Header Ads



ஓட்டமாவடி ஹிஜ்ராவில் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் கெளரவிப்பு


(ஏ.எம்.எம்.பிர்தெளஸ்)


ஓட்டமாவடி ஹிஜ்ரா வித்தியாலயத்தில் கடந்த 2020 & 2021 ஆம் ஆண்டுகளில் தரம் 5 இல் கல்வி கற்று புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவ செல்வங்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்ட நிகழ்வு பாடசாலையின் முதல்வர் ஜனாப். எம்.ஏ.ஸாபிர் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் கடந்த 2020 இல் தரம் 5 இல் கல்வி கற்ற 40 மாணவர்களில் 5 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர் இது பாடசாலையில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 12.5 % ஆகும், மேலும் 39 மாணவர்கள் 70க்கு மேல் புள்ளிகள் (97.5%) பெற்று சித்தியடைந்துள்ளனர்.


அத்துடன் கடந்த வருடம் 2021 இல் இடம்பெற்ற பரீட்சையில் 32 மாணவர்கள் தோற்றி 06 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றதுடன் (18.75 %) 28 மாணவர்கள் 70க்கு மேல் புள்ளிகள் (87.5 %) பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். 


இப்பெறுபேறுகள் கொரோனா கால கல்வி நடவடிக்கையில் பெறப்பட்ட அடைவு மட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் 2020, 2021 இல் தரம் 5 இல் கல்வி கற்ற அனைத்து மாணவர்களும் கெளரவிக்கப்பட்டதுடன் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் அதிபர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகளும் கெளரவிக்கப்பட்டனர்.


நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி, வலயக்கல்வி பணிப்பாளர் வைத்தியர் எஸ். எம். எம். எஸ். உமர் மெளலானா (SLEAS-1) அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், கெளரவ அதிதிகளாக  கோரளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி, கோட்டக் கல்வி பனிப்பாளர் வீ. டி. அஜ்மீர் (SLEAS) மற்றும் பாடசாலை மேம்பாட்டு இனணைப்பாளர், திட்டமிடல் DDE ஜனாபா. ஜே. தாஜுன்னிஸா (SLEAS) அவர்களும் விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி உதவி கல்வி பணிப்பாளர் (ஆரம்பக் கல்வி) ஜனாப். ஏ.எம். ஜாபீர் கரீம், மட்டக்களப்பு மத்தி ஆரம்ப கல்வி வளவாளர் ஜனாப். எம்.பி. நபீர் மற்றும் ஓட்டமாவடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை அதிபர் அல்ஹாஜ் எம்.ஏ. ஹலீம் இஸ்ஹாக் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன், சிறப்பு அதிதிகளாக ஓட்டமாவடி 3 ஆம் வட்டார பள்ளிவாசல், சனசமூக நிலையம், கிராமிய அபிவிருத்தி சங்கம் மற்றும் விளையாட்டு கழகங்களின் தலைவர்களும் கலந்து சிறப்பித்தனர்.


இந்நிகழ்வினை பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களுடன் பெற்றோர்களுடன் இணைந்து பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு மற்றும் கல்வி அபிவிருத்தி குழு என்பன ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.