Header Ads



சவுதி அரேபியாவின் மகிழ்ச்சியான செய்தி


சவூதி அரேபியாவின் கட்டுமான மற்றும் சுகாதாரத் துறைகளுக்காக அதிகளவான இலங்கையர்களை வேலைக்கு அமர்த்துவதற்கும், இராச்சியத்தில் பணிபுரியும் இலங்கை வீட்டுப் பணியாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியக் கட்டமைப்பை உயர்த்துவதற்கும் அந்த நாடு விருப்பம் தெரிவித்துள்ளது.


சவூதி அரேபியாவில் மனித வள மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருடன் இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார நடத்திய கலந்துரையாடல்களின் போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் சில காலங்களாக பிலிப்பைன்ஸ் மற்றும் பங்களாதேஷ் நாட்டவர்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்த நிர்மாணத் துறையில் பல வேலை வாய்ப்புகள் இலங்கை திறன்மிக்க தொழிலாளர்களுக்காக திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கைத் தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்தை மேலும் அதிகரிக்க சவுதி அமைச்சர் அஹமட் பின் சுலைமான் அல் ராஜ்ஹி இணங்கியதாக மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


இதேவேளை, அரசாங்கத்தின் விதிமுறைகளை மீறிய மற்றும் பிற தவறான செயல்களில் ஈடுபட்டுள்ள சுமார் 400 வேலைவாய்ப்பு நிறுவனங்களை மூடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.