Header Ads



புத்தளத்தில் நிறம் மாறியது கடல்


புத்தளம் மாவட்டத்தின் சில பகுதிகளில் கடல் நீர் பச்சை நிறமாக மாறியுள்ளது. 


இன்று (02) காலை முதல் புத்தளத்தின் கற்பிட்டி முதல் வென்னப்புவ வரையிலான கடல் கொத்தளிப்புடன் காணப்பட்டதுடன், கடல் நீரும் பச்சை நிறமாக மாறியுள்ளதாக மீனவர்கள் குறிப்பிட்டனர். 


நுண்ணுயிர் தாவரங்கள் அதிகரித்துள்ளமையே இதற்கான காரணம் என நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.


கடல் மாசடையும் போது இவ்வாறான நிலைமை ஏற்படுவதாகவும், இதற்கு முன்னர் காலி முகத்திடல் உள்ளிட்ட சில பகுதிகளில் கடல் நீரின் நிறம் மாறியதை காண முடிந்ததாகவும் நாரா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.