Header Ads



இலங்கையில் இருந்து மன்னர் சார்ஸுக்கு பறந்த கடிதம்


பிரித்தானியாவிலும் இலங்கையிலும், இராஜாங்க அமைச்சர் டயானா கமகே சட்ட விரோதமாக செயற்பட்டுள்ளதால் அவருக்கு எதிராக குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, இலங்கையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் குழுவொன்று பிரித்தானிய அரசர் சார்லஸுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.


'எஸ்.எல். தேசய' யூடியூப் சேனலை பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக ஆர்வலர் தர்ஷன ஹந்துங்கொட உட்பட சிலர் இந்தக் கடிதத்தை அனுப்பி வைத்ததுடன், அவர்கள் இன்று (28) பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்துக்குச் சென்று கடிதத்தை கையளித்துள்ளனர்.


டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குமாறு கோரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ள ஓஷால ஹேரத்தும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

No comments

Powered by Blogger.