Header Ads



மௌனமாக இருந்த, பசில் வருகிறார்


அமெரிக்காவில் நீண்ட காலம் தங்கியிருந்து கடந்த காலங்களில் அமைதியான அரசியல் நடைமுறையை கடைப்பிடித்து வந்த பசில் ராஜபக்ச எதிர்வரும் 20ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார்.


ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடும் நெருக்கடியை எதிர்நோக்கி வரும் இந்த தருணத்தில், வீழ்ச்சியடைந்துள்ள கட்சியை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக, பசில் ராஜபக்ஷ திடீரென நாட்டுக்கு வர தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் கட்சியின் தீர்மானங்களுக்கு புறம்பாக தீர்மானங்களை எடுக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அமெரிக்காவில் தங்கியிருந்த காலப்பகுதியில் ஜனாதிபதியுடன் அவ்வப்போது செய்திகளை பரிமாறிக்கொண்ட பசில் ராஜபக்ஷ, அமைச்சரவை மாற்றம் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து ஜனாதிபதியுடன் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடியுள்ளார் என்பதும்  குறிப்பிடத்தக்கது . TL

1 comment:

  1. நாட்டைக் குட்டிச் சுவராக்கி, கறுப்புக்கடைக்காரர்களை பெருக்கி, இலஞ்சத்ததையும் ஊழலையும் எல்லாத்துறைகளிலும் பரவலாக்கி பொதுமக்களின் சொத்துக்களையும் பணத்தையும் மோசடி செய்த இந்த நபரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்து சிறையிலடைத்து, வழக்கு முடியும் வரை இருபத்தைந்து வருடங்களுக்கு சிறையிலடைத்தால் நாட்டின் பிரச்சினைகளின் அரைவாசி உட னே முடிவடையும்.

    ReplyDelete

Powered by Blogger.