Header Ads



குரீகொடுவ ஜும்மாப் பள்ளிவாசலில், நெகிழ்வூட்டும் காட்சி (படங்கள்)


நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்றைய -18.11.2022-ஜும்மாவுக்கு குரீகொடுவ ஜும்மாப் பள்ளிக்கு சென்றிருந்தேன். பள்ளிவாசலை அடைந்ததுமே நெகிழ்வூட்டும் காட்சியொன்றைக் கண்டேன்.

பொதுவாக எமது மார்க்கம் அழகிய முன்மாதிரிகளையும், நற்பண்புகளையும் எல்லா இடத்திலும் எடுத்தியம்புகின்றது. அதன் வெளிப்பாடாக அண்மைக் காலத்திலிருந்து குரீகொடுவ ஜும்மாப் பள்ளியில் இவ்வாறான மாற்றத்தைக் காண்பதென்பது இது ஒரு நல்ல முன்மாதிரிக் கிராமம் என்பதற்கு உதாரணமாகும்.

ஒவ்வொரு இடங்களிலும் பதாகைகள் வைக்கப்பட்டு மிதிவண்டி வேறாக, மோட்டார் சைக்கிள் வேறாக, நான்கு சில்லு வாகனங்கள் வேறாக என அழகாக, வரிசையாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அது தவிர வருகை தரும் மக்கள் சிரமம் பாராது தங்களது பாதணிகளை ஒழுங்கு முறையில் நேர்த்தியாக கழற்றி வைக்கின்றனர். என்னைப் பொறுத்தவரையில் எமது பிரதேசத்தில் இவ்வாறான ஓர் ஒழுங்கமைப்பை நான் இன்று தான் கண்டேன்.

இவ்வாறான நல்லதொரு முன்னெடுப்பை மேற்கொண்ட குரீகொடுவ பள்ளி நிர்வாகம், அவர்களோடு கைகோர்க்கும் அந்நஜா சங்கம், பக்கபலமாக இருக்கும் ஊர் மக்கள் எல்லோருக்கும் என்னுடைய தனிப்பட்ட நன்றிகளும், பிரார்த்தனைகளும்.

பின்குறிப்பு: விசிநவ பகுதியில் வேரெங்கெல்லாம் இந்த நடைமுறை இருக்கிறது என்று தெரியாது. நான் இன்றுதான் இப்படியான ஒரு நிகழ்வை பிரதேசத்தில் கண்டேன். இப்படியான ஒழுங்குமுறை எமது எல்லா பிரதேசங்களிலும் இடம்பெற வேண்டும் என்பதனாலேயே இந்தக் காட்சியை உங்களோடு பகிர்ந்து கொண்டேன்.

- சப்ராஸ் அபூபக்கர் -




No comments

Powered by Blogger.