Header Ads



எமது உறவுகளின் சாத்வீக போராட்டத்திற்காக, பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்


அன்பின்  யாழ்.கிளிநொச்சி உறவுகளே, 


வடக்கிலிருந்து  பலவந்தமாக ஆயூத முனையில் வெளியேற்றப்பட்டு 32 வருடங்களாக தொடர்கிறது எமது உரிமைக்கான  போராட்டமும் அவலநிலை யும் இதற்காக எமது உறவுகளால் பல்வேறுகால கட்டங்களில் எமது போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவந்தள்ளது.


இந்த நிலையில் எமது உறவுகள் மீள்குடியேறியும் இன்றுவரையில் அவர்களுடைய அடிப்படை உரிமைகள் காணிப் பிரச்சினைகள் நிர்வாக ரீதியான முற்றுமுழுதான புறக்கணிப்புக்களும் இழுதஅதடிப்புக்களுக்கும் முகம்கொடுத்துவருகிறார்கள். 


இந்த நிலை தொடர்வதால் தமது கிளிநொச்சி மாவட்ட பிரதான தலைமை ஊரான நாச்சிக்குடா கிராமத்திலிருந்து பல்வேறு சிரமங்களுக்கு கஷ்டத்திற்கும் மத்தியில் வெளி உலகிற்க்கு சர்வதேச மட்டங்களுக்கும் எமது தார்மீக அடிப்படைப்பிரச்சினையினை கொண்டுசெல்லவும் எமது நாட்டு தலைமைக்கும் இந்த நாட்டு மக்களுக்கு இதை தெரியப்படுத்தி  தீர்வுக்காகவும் விடியலுக்காக வேண்டியும்   நியாயமான தீர்வுக்காகவும்  எமது சகோதரர்கள் இருவர் அகிம்சா பயணத்தை நடைபவணியாக கொழும்பை நோக்கி பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். 

இன்ஷா அல்லா நாளை புத்தளம் வந்தடைய உள்ளார்கள்.


இந்த வகையில் எம்மால் ஆன உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கவேண்டிய தார்மீகப் பொறுப்பு கடமையும் எம்யாவருக்கும் உள்ளது .எனவே இது விடயமாக புத்தளத்தில் இருக்கும்  இயங்கும் சகல தரப்பினரையும் உள்ளடக்கிய  அமைப்புக்கள்.விழிப்புணர்வு அமைப்புக்கள். தொண்டு நிறுவனங்கள்.சமூக ஆர்வளர்கள் .சமூக சிந்தனையாளர்கள் சமூக சேவையாளர்கள் ஆகியோரை  யாவரையும் அன்பாக அழைக்கின்றோம். 


எவ்வாறாக நாம் பூரண ஆதரவை தெரிவிக்கலாம் என்ற தொனிப்பொருளின் கீழ் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடாகி உள்ளது .                

 இடம் சதாமியபுர அல்பலாஹியா மத்ரஸா     

 காலம் 02/11/2022  நேரம் அஸர் தொழுகையின் பின்னர் 


யாவரும் கலந்து கொண்டு ஒத்துழைப்பை வழங்குங்கள். 

ஒருங்கிணைப்புக்காக                           புத்தளம் வாழ் யாழ் கிளிநொச்சி வெளியேற்றப்பட்ட சிவில் சமூகம்      


மலிக் மெளலவி 0718618749.       


ஹஸன் பைறூஸ் 0767284996.      


வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட எமது அனைத்து உறவுகளும் உங்களது பூரண ஒத்துழைப்பை ஆதரவையும் வழங்குங்கள் .

No comments

Powered by Blogger.