78,600 போதை மாத்திரைகள் கண்டுபிடிப்பு
மோதர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு வடக்குப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 78,600 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நேற்று (21) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு ஒன்றில், 4,800 போதை மாத்திரைகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர், சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது மேலும் 73,800 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர் களுபோவில பகுதியில் உள்ள வீட்டில் பதுங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (22) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
Post a Comment