Header Ads



இப்படியும் ஏமாற்றுகிறார்கள் - இதுவரை 60 இலட்சம் ரூபா மாயம்


முகநூல் மற்றும் இணையதளங்களில் வெளியிடப்படும் விளம்பரங்கள் மூலமாக பணம் திருடும் திட்டமிட்ட மோசடி இடம்பெற்று வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்த மோசடியில் ஈடுபட்ட மூவர் (16) கண்டியில் கணினி குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி, தலாத்துஓயா மற்றும் மதவாச்சிப் பிரதேசங்களில் வசிக்கும் இவர்கள்,


25 மற்றும் 30 வயதுடையவர்களென குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவிக்கின்றது.


முகநூல் மற்றும் இணையதளங்களில் வெளியாகும் விளம்பரங்களைப் பார்த்து, அந்த விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களுக்கு அழைப்பது தான் இவர்களின் வேலையாகும். அவர்கள் இதற்காக தங்கள் பெயரிலுள்ள சிம் கார்டுகளை பயன்படுத்துவதில்லை. இவர்கள் முதலில் அந்த விளம்பரங்களில் உள்ள பொருட்களை யாருக்கும் விற்க வேண்டாம் நாங்களே வாங்குவதாகக் கூறுவர். "அந்த விளம்பரங்களிலுள்ள பொருளை யாருக்கும் விற்க வேண்டாம் நான் அதை வாங்குகிறேன்


எனக்கு கொஞ்சம் பணம் போதாது ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த எனக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள்" என்றும் இவர்கள் கூறுவர். விளம்பரதாரர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவே இவ்வாறு கூறியுள்ளனர்.


இறுதியில் விளம்பரதாரர் பொருட்களை விற்க விருப்பம் தெரிவித்த பிறகு, அவர் வங்கி கணக்கு எண்ணைக் கோரி ஒன்லைன் பரிவர்த்தனை செய்கின்றனர். அதை கணக்கில் இட்ட பின்னர் மீண்டும் விளம்பரதாரிடம் பேசி, நான் கொஞ்சம் பணம் பைப்பிலிட்டேன் அது கிடைத்ததா? என்று பாருங்கள் எனக் கூறுவர். பதில் கிடைக்கும் போது அதில் ஓடிபி நம்பர் இருக்கும், முடிந்தால் கோபப்படாமல் கொஞ்சம் சொல்லுங்கள் என்கின்றனர். அது என்னவென்று புரியாதவர்கள் அதனை கொடுக்கிறார்கள். கொடுக்கப்பட்டவுடன் பணத்தை வைப்பிலிட்டு விளம்பரதாரரின் கணக்கினுள் நுழைந்து மற்றொரு வங்கிக் கணக்கில் பணத்தை வரவு வைக்கின்றனர்.


வங்கியிலிருந்து பெறப்படும் கடவுச்சொல் எண் அல்லதுOTP எண்ணை வெளியாரிடம் வழங்க வேண்டாம் என்றும் இவ்வாறான மோசடிகள் நூற்றுக்கணக்கில் இடம்பெற்றுள்ளதாகவும் அதனால் பலர் பாதிப்படைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கண்டியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களில் ஒரு நபர் சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் உள்ள விளம்பரங்களை ஆராய்ந்து விளம்பரதாரர்களுக்கு அழைப்பை ஏற்படுத்துகிறார்.


கயான் குமார வீரசிங்க

No comments

Powered by Blogger.