Header Ads



Call எடுக்க வேண்டுமெனக் கூறி, கையடக்க தொலைபேசியை வாங்கிக் கொண்டு தப்பி ஒடிவிடும் கும்பல்


கண்டி நகரில் பாடசாலை மாணவர்களிடம் பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை திருடும் கும்பல் ஒன்று செயற்பட்டு வருவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.


இதேவேளை பாடசாலை மாணவர்களிடம் பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை திருடும் செயற்பாடு கண்டி மாவட்டத்தில் மற்றுமன்றி இலங்கையின் பல மாவட்டங்களிலும் இவ்வாறான நிலை காணப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கண்டி நகரில் இடம்பெற்ற குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில், கண்டி பொலிஸ் தலைமையகத்தில் பெற்றோர்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.


இதேவேளை, மற்றுமொரு பெற்றோர் குழுவினர் தமது பிள்ளைகளுக்கு சிரமம் என்ற அச்சத்தில், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதை தவிர்த்து வருகின்றனர்.


சிவில் பொலிஸ் அதிகாரிகள் எனக் கூறி மாணவர்களின் புத்தகப் பைகள், பணப்பையை சோதனை செய்து, அங்குள்ள பணம் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களை எடுத்துச் செல்கின்றனர்.


இது குறித்து யாரிடமும் முறைப்பாடு செய்யக்கூடாது என மிரட்டிவிட்டு ஓடிவிடுவதாக பெற்றோர் கூறுகின்றனர்.


இதேவேளை, கண்டிக்கு வரும் பெண்களிடம் தொலைபேசி அழைப்பை மேற்கொள்ள வேண்டும் என கூறி கையடக்க தொலைபேசியை வாங்கிக் கொண்டு தப்பி ஒடிவிடும் கும்பல் ஒன்று தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.


கண்டி ஏரி சுற்று பகுதி மற்றும் உடுவத்த காட்டு பிரதேசங்களிலும் காதலர்களை பயமுறுத்தி அவர்களிடம் இருந்து பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல் தொடர்பிலும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

No comments

Powered by Blogger.