Header Ads



விகாரையில் ஒலிபெருக்கி பயன்படுத்தும் போது சுற்றியுள்ள குடியிருப்பாளர்களுக்கு எரிச்சலையும், இடையூறுகளையும் ஏற்படுத்த வேண்டாம் - நீதிமன்றம் உத்தரவு


கிருலப்பனை, பொல்ஹேன்கொடவில் உள்ள அலன் மதினியாராமய விகாரையை சுற்றியுள்ள குடியிருப்பாளர்களுக்கு எரிச்சலையும் இடையூறுகளையும் ஏற்படுத்தாமல் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துமாறு, அந்த விகாரையின் விகாராதிபதி உடுவே தம்மாலோக தேருக்கு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், இன்று (31) உத்தரவிட்டது.


இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் சுற்றாடல் நீதிக்கான மையம் உள்ளிட்ட ஆறு தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


விகாரையில், ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி, அப்பிரதேசத்தில் வசிக்கும் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டுத்துவதாக தனிப்பட்ட முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

 

அதிகாலை 5 மணிமுதல் 6 மணியான காலப்பகுதில் ஒலிபெருக்கியை ஒலிக்கவிட்டு, விகாரையை அண்மித்திருக்கும் குடியிருப்பாளர்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்குவதாக செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் 2016ஆம் ஆண்டு தேரருக்கு எதிராக நிபந்தனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.


குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 98ஆவது பிரிவின்படி, அப்பகுதியில் ஒலி மாசு ஏற்படுவதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட உள்ளிட்ட அறுவரால் குறித்த தனிப்பட்ட முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


தங்கள் விருப்பத்துக்கு மாறாக ஒலி பெருக்கி மூலம் எழுப்பப்படும் ஒலியைக் கேட்க நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் பலமுறை முறைப்பாடு செய்தும் அதிகாரிகளை இதைக் கவனத்தில் கொள்ளவில்லை என்றும் முறைப்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.