Header Ads



இரட்டைக் குடியுரிமை உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் சபாநாயரின் நிலைப்பாடு என்ன..?


இரட்டைக் குடியுரிமை வைத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியது நாடாளுமன்றம் அல்ல தேர்தல்கள் ஆணைக்குழு என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.


தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்தல் ஆணையமே தெரிவு செய்வதால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.


மேலும், இரட்டைக் குடியுரிமை வைத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நீதிமன்றில் சவால் விடுக்கும் திறன் நாட்டின் எந்தவொரு பிரஜைக்கும் இருப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.


இரண்டு அல்லது மூன்று எம்.பி.க்கள் இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பதாகத் தமக்குத் தெரிய வந்துள்ளதாகத் தெரிவித்த சபாநாயகர், வேறு எம்.பி.க்கள் எவரேனும் இருக்கின்றார்களா என்பது தமக்குத் தெரியாது எனவும் தெரிவித்தார்.


இரட்டைக் குடியுரிமை குறித்து சட்டப்படி செயல்படாத வரையில் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்றார். சட்டங்களை தயாரிப்பது மட்டுமே நாடாளுமன்றத்தின் செயற்பாடு எனவும் அந்த சட்டங்களை நடைமுறைப்படுத்துவது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பொறுப்பாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

2 comments:

  1. பாராளுமன்றம் சபாநாயகரின் கட்டுப்பாட்டில் உள்ளது. சட்டரீதியான பாராளுமன்ற அமர்வை நடாத்தும் அதிகாரமும், அதில் சட்டத்தையும் அமைதியையும் நிலைநாட்டும் அதிகாரமும் சபாநாயகருக்கு சட்டமுலம் வழங்கப்பட்டுள்ளது. அந்த சட்டத்தை அமல் படுத்தும் நிலையை விட்டு இந்த சபாநாயகர் விரண்டோடும் பேச்சு இங்கே தௌிவாகின்றது. அப்படியானால் அவரும் குறைந்தது பெலாரஸ் நாட்டின் குடியுரிமையாவது பெற்றிருக்க வேண்டும் என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்படுகின்றது. இந்த சந்தேகத்தை சபாநாயர் தௌிவுபடுத்துவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete
  2. தேர்தல்கள் ஆணையாளர் சொல்வது "பொட்டு". "இரட்டைக் குடியுரிமை பெற்ற" ஒவ்வொரு இலங்கையருக்கும் இலங்கைப் பிரஜாவுரிமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது மற்றும் பதிவுகள் கொழும்பில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் உள்ளன. பாராளுமன்றத்திற்கு ஆர்வமுள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் ஏனையவர்களின் பெயர்கள் மற்றும் விபரங்களை தனக்கு வழங்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகத்திடம் தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை வைப்பது "மட்டும்" ஆகும். அது நிறைவேற்றப்படும். ஒரு வார காலத்தில்.
    இது ஏன் நடக்கவில்லை என்பது ஒரு "MYSTRY". ஆனால் நிச்சயமாக ஆம், அதிகாரத்துவத்தினர் எப்போதுமே தங்களுடைய ரொட்டியை அம்பலப்படுத்த அனுமதிக்க மாட்டார்கள், ஏனென்றால் பெரும்பாலான அரசு சேவைகளில் உள்ள அனைத்து உயர் அதிகாரிகளும் "இரட்டை" குடியுரிமை மற்றும் இரண்டு கடவுச்சீட்டுகளை அனுபவித்து வருகின்றனர் - ஒருவர் இலங்கையர் மற்றும் மற்றவர் அவர்கள் குடியுரிமை பெற்ற நாட்டிலிருந்து . எனவே எம்.பி.க்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் அவர்கள் வெளிப்படுத்தினால், புதிய அரசியலமைப்பு திருத்தம் 21ல் அரசு அதிகாரிகளும் இடம் பெற்றிருப்பதால் அவை அனைத்தும் அம்பலமாகிவிடும். இந்த விஷயத்தில் அரசாங்கம் கடுமையாக நடந்துகொண்டு "இரட்டைக் குடியுரிமையை" அனுபவிக்கும் அனைவரையும் தாமதமின்றி அம்பலப்படுத்த வேண்டும். TNA பாராளுமன்ற உறுப்பினர்களில் 90% பேர் இரட்டை குடியுரிமை பெற்றுள்ளனர் மற்றும் 60% ஜனாதிபதி சட்டத்தரணிகள் மற்றும் மூத்த சட்டத்தரணிகள் "இரட்டை குடியுரிமை பெற்றுள்ளனர்.
    Noor Nizam (நூர் நிசாம்) - அமைதி மற்றும் அரசியல் செயற்பாட்டாளர், அரசியல் தொடர்பாடல் ஆய்வாளர், SLFP/SLPP பிரமுகர், தேசப்பற்றுள்ள குடிமகன்.
    English:
    What the Elections Commissioner is telling is "BULLSHIT". Every Sri Lankan who is a "DUAL CITIZEN" has been issued with a certificate of Sri Lankan Citizenship and the records are available with the Department of Immigration and Emigration in Colombo. It is "ONLY" for the Elections Commissioner to make a request to the Controller General of the Department of Immigration and Emigration to provide him with all the names and details of all MP's, Government Officials and others of interest to Parliament and it will be done in a weeks time.
    Why this is not happening is a "MYSTRY". But certainly YES, bureaucrats will always NOT allow their bread to be exposed, because the majority of all HIGH OFFICALS in the government services are having "DUAL" citizenship and enjoying two passports - one Sri Lankan and the other from the country they have obtained citizenship. So if they reveal all information about the MP's, then they all will be exposed as the new constitution amendment 21 includes government officials too. The government has to be stern on this matter and EXPOSE all who enjoy "DUAL CITIZENSHIP" without delay. 90% of the TNA MP's have dual citizenship and around 60% of the Presidents Counsels and Senior Lawyesr have "DUAL CITIZENSHIP.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart, Patriotic Citizen.

    ReplyDelete

Powered by Blogger.