Header Ads



"ஹாஜி குளிப்பதற்கு அஞ்சுவதைப் போன்று"


 21 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துடன் எழுந்த தொழில்நுட்ப பிரச்சினைகளின் அடிப்படையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவாவை பதவியில் இருந்து நீக்க அரசாங்கம் தயாராகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.


யாரேனும் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தால் நீதிமன்றத்தை நாடத் தயார் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளதாகவும், எனவே அவரை அப்பதவியில் இருந்து நீக்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகளில் ஒன்றாக இருப்பதாகவும் எம்.பி குறிப்பிட்டார்.


'சுதந்திர மக்கள் பேரவை' கொழும்பில் இன்று (30) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு தெரிவித்தார்.


உலகிலேயே மிகவும் அழுக்கு மனிதனாக இருந்த ஹாஜி குளிப்பதற்கு அஞ்சுவதைப் போன்று தற்போதைய அரசாங்கம் தேர்தலுக்கு அஞ்சுவதாகவும் அழகப்பெரும தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.