Header Ads



இங்கிலாந்தையும், பிரான்ஸையும் ராஜபக்சக்களா ஆண்டார்கள் என்று நாங்கள் கேட்கிறோம்


பிரான்சில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பட்டினியால் வாடும் நிலைமைகளுக்கும் ராஜபக்சக்களுக்கு தொடர்பு உள்ளதா என அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே அண்மையில் கேள்வி எழுப்பினார்.


நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர்,

பிரான்சிழும் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பட்டினி நிலைஏற்பட்டுள்ளது . அங்கும் பாடசாலை மாணவர்கள் உணவின்றி மதிய உணவுப் பெட்டிகளைக் கொண்டு செல்கின்றனர்


இவை அனைத்தும் உலகப் பொருளாதார நெருக்கடியின் விளைவாக, கொவிட் தொற்றுநோயுடன் வந்ததை நாம் மறந்துவிட முடியாது. பூஜ்ஜியத்தில் இருந்த நாட்டின் பணவீக்கம் 10 ஆக அதிகரித்துள்ளது. பிரான்சில் எரிபொருள் வரிசைகள் உள்ளன. அங்கும் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க முடியவில்லை, இங்கிலாந்தையும், பிரான்ஸையும் ராஜபக்சக்களா ஆண்டார்கள் என்று நாங்கள் கேட்கிறோம். இந்தப் பிரச்சனைகள் எல்லாம் அவர்களால் உருவாக்கப்பட்டதா, அதற்கு அவர்களா பொறுப்பு?”


இது ஒரு உலகளாவிய பொருளாதார நெருக்கடி. நாங்கள் எப்போதும் இறக்குமதிப் பொருளாதாரத்திற்குப் பழக்கப்பட்டதால் அந்த நெருக்கடி தீவிரமானது . நாங்கள் எல்லாவற்றையும் மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தோம் .

எனவே, எங்களால் இந்த பொருளாதாரத்தை சரியான முறையில் நிர்வகிக்க முடியவில்லை, இதன் விளைவாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டியிருந்தது என அவர் மேலும் தெரிவித்தார்.

2 comments:

  1. செய்ய வேண்டிய அட்டகாசங்கள், களவு,வஞ்சகம்,ஊழல் அத்தனையையும் செய்துவிட்டு அவற்றின் காரணமாக இன்று நாடு வங்கரோத்து நிலைமையை அடைந்திருப்பதை எமது பிழைதான் காரணம் எனக்கூறும் இந்த ஊழல்காரர்களை கைது செய்ய இந்த நாட்டில் அரசாங்கம் இல்லை. அதனால் தான் இவ்வளவு தைரியமாக கதைக்கின்றனர். இந்த ஊழல்வாதிகள் முன்னேறுவதற்கு இங்கிலாந்தையும் பிரான்ஸையும் உதாரணமாகக் கொள்வதில்லை. தோல்விக்கும் நட்டத்துக்கும் தான் அந்த நாடுகளை உதாரணம் காட்டுகின்றனர்.அந்த நாட்டு அரசாங்கங்களில் ஊழல் களவு அறவே கிடையாது. ஆனால் அந்த நாடுகள் வட்டியின் அடிப்படையில் அவற்றின் பொருளாதாரம் அமைந்திருப்பதனால் வட்டி அக்கிரமம், அநியாயம் அதனால் அவ்வப்போது அந்த பொருளாதாரங்கள் ஆட்டம் காணுகின்றன. என்ன காரணம் கொண்டும் இந்த ஊழல்வாதிகளின் செயலை சமாளிக்க ஐரோப்பிய நாடுகளை உதாரணம் காட்டுவது எந்தவகையிலும் பொருத்தமில்லை. தானும் வழிகெட்டு பொதுமக்களையும் வழிகெடுத்துவதுதான் இந்த ஊழல்காரன்களின் பழக்கமாகும்.

    ReplyDelete

  2. "பிரான்சில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பட்டினியால் வாடும் நிலைமைகளுக்கும் ராஜபக்சக்களுக்கு தொடர்பு உள்ளதா என அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே அண்மையில் கேள்வி எழுப்பினார்."

    He answers his question himself as follows:

    "எனவே, எங்களால் இந்த பொருளாதாரத்தை சரியான முறையில் நிர்வகிக்க முடியவில்லை, இதன் விளைவாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டியிருந்தது."

    Will he and all the Rajapakse bootlickers resign like their beloved Former President? Needless to say, Very, Very UNLIKELY

    ReplyDelete

Powered by Blogger.