Header Ads



பாக்குடன் பாடசாலைக்கு வந்த மாணவனை பிடித்த போது...!


போதைப்பாக்குடன் பாடசாலைக்கு வந்த மாணவன், தனது கையினை பிளேட்டால் அறுத்து காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


தெல்லிப்பளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 


சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, 


குறித்த மாணவன் போதை ஊட்டிய பாக்குடன் பாடசாலைக்கு வருகை தந்துள்ளார். அது தொடர்பில் அறிந்து கொண்ட ஆசிரியர்கள் மாணவனிடம் விசாரணைகளை முன்னெடுத்து பாக்கினையும் மீட்டு இருந்தனர். 


அதனை அடுத்து அதிபர் ஊடாக அப்பகுதி சுகாதார பரிசோதகருக்கு சம்பவம் தொடர்பில் அறிவித்த போது , குறித்த மாணவன் தனது கையினை வெட்டி காயப்படுத்தி உள்ளான்.


காயத்திற்கு உள்ளன மாணவன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். 


மாணவனுக்கு எங்கிருந்து பாக்கு கிடைத்தது ? பாடசாலைக்கு அருகில் யாரேனும் விற்பனை செய்கின்றார்களோ ? என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


எம்.றொசாந்த் 


No comments

Powered by Blogger.