Header Ads



அரியவகை கடலாமை புத்தளத்தில் கரையொதுங்கியது


புத்தளம் உடப்பு ஆண்டிமுனை பகுதியில் கடலாமையொன்று உயிரிழந்த நிலையில் இன்று (11.10.2022) கரையொதிங்கியுள்ளது.

குறித்த கடலாமை உடற்கூற்று பரிசோதனைக்காக ஆனவிழுந்தான் வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் தெரவிக்கையில்,“இந்த கடலாமை (Olive Redly)ஒலிவ நிற வகையைச் சேர்ந்தது. அத்துடன் இந்த கடலாமை 30 கிலோ கிராம் எடைக்கொண்டு காணப்படுகின்றது.


இந்த வகை கடலாமைகள் பல ஆண்டுகாலமாக வாழுகின்ற உயிரினமாக கருதப்படுகின்றது. தற்போது ஆமைகள் இறைச்சிக்காக அதிகமாக கொள்ளப்பட்டு வருவதினால் அழிவடைந்து வருகின்றன.”என கூறியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பாக கொழும்பு துறைமுக கடற்பரப்பிற்கு வெளியே எம்.வி. எக்ஸ்பிரஸ் கப்பல் தீப்பிடித்து எரிந்ததையடுத்து பல கடலாமைகள், டொல்பின்கள், திமிங்களங்கள் தொடர்ந்தும் உயிரிழந்த நிலையில் கரையொதிங்கியமைக் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.