கருத்துச் சுதந்திரத்தில் கை வைக்கிறாரா எர்துகான்..? சுத்தியலால் தொலைபேசியை நொருக்கிய எம்.பி.
-சி.எல்.சிசில்-
துருக்கி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்தில் பேசும் போது தனது கைத்தொலைபேசியை சுத்தியலால் அடித்து நொருக்கியுள்ளார்.
எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சியின் உறுப்பினரான புராக் எர்பே, இணையத்தில் ‘தவறான தகவல்களை’ எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்ட முன்மொழியப்பட்ட அரசாங்க ஆதரவு சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
இந்தச் சட்டத்தின் கீழ், சமூக ஊடக வலையமைப்புகள் மற்றும் இணையத் தளங்கள் “தவறான தகவல்களைப் பிரசாரம் செய்ததாக” சந்தேகிக்கப்படும் பயனாளர்களின் விபரங்களை வெளியிட வேண்டும். மேலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இந்த சட்டமூலம் சட்டமாக நிறைவேற்றப்பட்டால், பத்திரிகை சுதந்திரத்தை மீறுவதாகவும், பரவலான தணிக்கைக்கு வழிவகுக்கும் என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
Post a Comment