Header Ads



மகனை திருத்தி தருமாறு பொலிஸில் ஒப்படைத்த பின், தாய் கூறிய காரணங்கள்


பெண் ஒருவர் கடந்த இரண்டு வருடங்களாக போதை பொருளுக்கு அடிமையாகி உள்ள தனது மகனை திருத்தித் தருமாறு கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் இன்று (19) காலை ஒப்படைத்துள்ளார். 


கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடும்பிராய் மேற்கு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 


ஒப்படைக்கப்பட்ட இளைஞன் க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றிய பின் வீட்டில் இருப்பதாகவும், கடந்த 2 வருடங்களுக்கு மேலாக போதை பொருள் பாவனையில் ஈடுபட்டு வருவதன் காரணமாக நேரத்துக்கு ஒழுங்காக சாப்பிடுவதில்லை, இரவில் தூக்கமின்மை போன்ற பல இடர்பாடுகளுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில், தனது மகனின் எதிர்காலம் தொடர்பில் சிந்தித்த தாய் தனது மகனை கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் திருத்தி தருமாறு இன்று ஒப்படைத்துள்ளார். 


பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட குறித்த இளைஞன் நாளைய தினம் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட உள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. 


- பிரதீபன்-

No comments

Powered by Blogger.