Header Ads



இலங்கையின் பொருளாதார நெருக்கடியை மனித உரிமைகளுக்குள் இணைத்து, சர்வதேச சமூகம் விரைவாகச் செயல்பட வேண்டும்


இலங்கையின் பொருளாதார நெருக்கடியை மனித உரிமைகளுக்குள் முழுமையாக இணைக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை இன்று -04- கோரியுள்ளது.

இலங்கை அதிகாரிகளுக்கும் சர்வதேச சமூகத்தினருக்கும் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2022 ஜூன் மற்றும் செப்டம்பருக்கு இடையில் சர்வதேச மன்னிப்புசபை, இலங்கை சமூகத்தின் பரந்த அளவிலான 55 பேருடன் நேர்காணல்களை நடத்திய நிலையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நேர்காணல்கள், ஆபத்தான வேலையில் உள்ளவர்கள்; தினசரி கூலி தொழிலாளர்கள்; மீன்பிடித் துறை மற்றும் தோட்டங்களில் பணிபுரிபவர்கள்; குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய மலையக தமிழ் சமூக மக்கள்; பொது சுகாதார ஊழியர்கள்; சிவில் சமூக குழுக்கள்இ மனிதாபிமான அமைப்புகள் மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நிபுணர்களின் பணியாளர்கள் ஆகியோர் மத்தியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இலங்கை இன்று, பட்டினி, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ஆழ்ந்த வறுமையில் இருக்கும் நிலையில் இது செயல்பாடு அவசியம் என்று மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.


நாடு இன்று பொருளாதார நெருக்கடியில் சுகாதாரம் உணவு மற்றும் சமூகப் பாதுகாப்புக்கான உரிமைகளைப் பாதுகாத்தல் மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் மீதான நெருக்கடியின் பேரழிவு தாக்கம் என்பவற்றில் மொத்த முறிவுக்கு அருகில் வந்துள்ளது.


அத்துடன் உயர்ந்த பணவீக்கம் ஏற்கனவே இருக்கும் சமூக சமத்துவமின்மையை அதிகப்படுத்தியுள்ளது. 


இந்தநிலையில் மக்களின் உரிமைகளுக்கான அணுகலை கொடூரமான முறையில் பறித்துள்ள இந்த நெருக்கடியின் மனித உரிமை தாக்கத்தை குறைக்க இலங்கை அதிகாரிகளும் சர்வதேச சமூகமும் விரைவாகச் செயல்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் பொருளாதார சமூக மற்றும் கலாசார உரிமைகள்  பற்றிய ஆராய்ச்சியாளரான சன்ஹிதா அம்பாஸ்ட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.