Header Ads



நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோமா..? அல்லது சர்வதிகார அரசில் வாழ்கிறோமா..??


எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற  உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்த கருத்துக்கள்.


வசந்த முதலிகே உள்ளிட்ட குழுவினர் கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில்,இதுவரை நீதிமன்றில் எவ்வித குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதச் சட்டத்தை வாபஸ் பெற்று புதிய சட்டத்தை முன்வைப்போம் என அரசாங்கம் கூறிய போதிலும் அதனை அவர்கள் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர்.நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோமா அல்லது சர்வதிகார அரசில் வாழ்கிறோமா என நம் நாடு எந்தப் பாதையில் செல்கிறது என்றும் யோசிக்க வேண்டியுள்ளது.


அது மாத்திரமன்றி வசந்த முதலிகே சார்பாக ஆதிவாசித்தலைவர் பேசியதுடன் அவருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.இது ஒரு மோசமான நிலை.நமது நாட்டின் அனைத்து மனித உரிமைகள் மற்றும் சுதந்திர மரபுகள் ஆபத்தை எதிர்கொள்ளும் தருணம் இது. உயர் பாதுகாப்பு வலயம் கொண்டு வரப்பட்டு அதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டு மீண்டும் வாபஸ் பெறப்பட்டது.பிறகு, தெரியத்தனமாகவே கையெழுத்து போடப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டதாக அறிக்கை வெளியிடப்பட்டது.இது எத்தகைய சிறுபிள்ளைத்தனமான அறிக்கைகள்.


இது போதாக்குறைக்கு தற்போது புனர்வாழ்வு பணியகம் என்ற ஒன்றை கொண்டு வந்துள்ளனர்.மக்கள் தங்கள் துக்கங்களையும் வலிகளையும் வெளிப்படுத்தி வீதிக்கு வரும் போது, ​அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் போது, ​அவர்களை ஒடுக்குவதற்கும், அச்சுறுத்தல்களை விடுத்து தடுக்கும் முகமாக சட்ட ரீதீயான நிறுவனங்களை நிறுவ முயல்கின்றனர். பிரச்சினைகள் அதிகரிக்கும் போது அவற்றுக்குத் தீர்வுகளை முன்வைக்க முடியாத போது அரசாங்கத்தின் பதில் அடக்குமுறையாக மாறியுள்ளது.


எந்த நீதிமன்ற விசாரணையும் இல்லாமல் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டிய பயங்கரவாதி என்று அதிகாரிகள் முடிவு செய்யலாம். நீதிமன்ற விசாரணை அவசியமில்லை.நம் நாட்டில் இதற்கு முன் இந்நிலை ஏற்ப்பட்டதில்லை.71 கிளர்ச்சிக்கு பின் பெரிய தவறு செய்தவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.சிறு தவறு செய்த உதவியாளர்கள் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டனர். இதனை இன்று இராணுவத்தின் உதவியுடன் செய்யப்போகும் வேலைத்திட்டத்தின் எச்சரிக்கை.இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


அன்மையில் நாவலப்பிட்டியில் எமது ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் தலைமையில் நாவலப்பிட்டியிலுள்ள அவரது கட்சி அலுவலகத்திற்கு முன்பாக அமைதியான முறையில் போராட்டம் நடத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றது.அவர்களின் அடிப்படை உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டு கைது செய்தனர்.பாசிச அணுகுமுறையை நோக்கிச் செயல்படுகின்றனர்.இது பாரதூரமான ஓர் நிலை.முறைமை மாற்றத்தைக் கோரி வீதிக்கு வந்தவர்களை புனர்வழிக்க முற்படுகின்றனர்.

மாறாக இன்று அரசாங்கம் அதற்காகக் குரல் எழுப்புபவர்களையும் அரசியல் எதிரிகளையும் வேட்டையாடப் போகின்றனர்.


நாடு இவ்வாறானதொரு நெருக்கடியை எதிர்நோக்கி மக்கள் அழுத்தங்களை அனுபவிக்கும் போது அந்த குரல்களுக்கு செவிசாய்க்காமல் அடக்குமுறை மூலம் பதில் சொல்லலாம் என்று நினைக்கும் நிலைக்கு அரசாங்கம் வந்துவிட்டதாகவே தெரிகிறது. வரலாறு காணாத நெருக்கடியை நாடு எதிர்கொண்டுள்ளது.


எங்களின் கடன் தொகை 24 ட்ரில்லியன் என்று பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நெருக்கடியில் இருந்து மீள வேண்டிய பொறுப்பு இந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது.அந்த சுமையை நாமே சுமக்க வேண்டும்.,வரிப்பணம் எப்படி செலவிடப்படுகிறது?மக்கள் நலனுக்காக செயல்படுகிறதா? என்பதை அறியும் உரிமை மக்களுக்குண்டு.இன்றைய Daily FT நாளிதழின் முதல் பக்கத்தில்,சீர்திருத்தப் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்று சுதந்திரமான பரப்புகளிலில் இருந்து கருத்துகள் வெளிவருகின்றன.


அதே போன்று இந்தப் பணத்தின் 30 வீதம் மாகான சபையில் சம்பளம் கொடுப்பதற்கும் வீண் செலவினங்களுக்குமே செலவிடப்படுவதாகவும் இவ்வாறு செய்வது நல்லதல்ல என்றும் அவை சீராக இடம்பெற வேண்டும் என்றும் அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.அவ்வாறே இலஞ்சம், ஊழல் அதிகரித்து எண்ணைவளத் துறையிலும் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடி பற்றி பேசுகின்றனர்.இந்த ஆட்சிக் காலத்திற்குள் எவ்வளவு ஊழல் மோசடி பற்றி பேசப்பட்டுள்ளது.சீனி,வெள்ளைப் பூடு,எரிவாயு இவற்றில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடி குறித்து பேசப்பட்டது.இவை மக்களின் வரிப்பணம்,இவற்றை தேவையற்ற முறையில் செலவிடும் போது கலவரம் ஒன்று உருவாகுவதனை எங்களால் சிந்திக்க முடியுமா? அறவிடப்படும் அதிக வரியுடன் அதற்கான அரசின் பொறுப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கமாறு குறிப்பிடப்படுகிறது. அதிகரிக்கப்படும் வரி  மக்களின் நலனுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.நம்பிக்கை முற்றாக இழந்து அந்தப் பத்திரிகையிலே முக்கியமான ஒரு விடயம் இருக்கிறது. பணத்தின் பெறுமதி  100 வீதம் குறைந்துள்ளது.நுகர்வோர் பண வீக்கம் 68 வீதத்தால் அதிகரித்து மக்களுக்கு கிடைக்கும் வருமானம் இவ்வாறு இருக்க அந்த கிடைக்கும் பணத்தின் பெறுமதி 100க்கு 100 வீதம் குறைந்து இருக்கும் நேரத்தில், வரிச் மேலும் சுமையை சுமக்க வேண்டியுள்ளது என்றாலும் கிடைக்கும் வரிப் பணத்தையும் மோசடிக்கும் வீண் செலவினங்களுக்கும் உட்படுத்தாமல் வெளிப்படத் தன்மையை பாதுகாத்து மக்களுக்கு பொறுப்புக் கூறுகின்ற கடமை அரசுக்கு உள்ளது. சுதந்திர ஊடகம் அதனைத்தான் வேண்டுகிறது.அதற்க பதிலளிக்க அரசு தயாரில்லை.மோசடியால் இல்லாமல் போன பணத்தைப் பற்றி ஒரு வார்த்தை பேசுவதில்லை,செய்த ஊழல் மோசடிக்கு பதிலளிக்குமாறு ஜெனீவா கூட்டத்தின் போது எங்களுக்கு எதிராக விரல் நீட்டப்பட்டது.மனித உரிமை ஆணைக்குழு எமது நாட்டின் பொருளாதார சீர் குழைவு பற்றியோ அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றியுமோ இதற்கு முன்னர் ஒரு வார்த்தையும் பேசவில்லை.தற்போது முதல் தடவையாக பேசுகிறது.பிரச்சினை இருக்கிறது.அதற்கு முகம் கொடுக்க வேண்டும். என்றாலும் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயற்பாட்டிலும் வெளிப்படத்தன்மை கானப்படல் வேண்டும்.


பௌத்த தர்மத்தின் நெறிமுறைகளைப் பற்றிப் பேசி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இன்று முற்றிலும் மாறுபட்ட ஒன்றைச் செய்கிறது. 

இருபத்தி இரண்டாவது திருத்தத்தை பாராளுமன்றத்தில் முன்வைக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது.ஆனால் அது தொடர்பில் அரசாங்கத்தில் ஒரு நிலைப்பாடு இல்லை. அச்சாறாக மாறியுள்ளது.எமது நிலைப்பாட்டை எதிர்கட்சியில் இருந்து தெளிவுபடுத்தியுள்ளோம் எமது கட்சியின் செயலாளர் நாயகம் 21 ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்பித்தார்.அதன் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு திருத்தத்தை முன்வைக்குமாறு அரசாங்கத்தை கோருகிறோம்.அரசாங்கத்திற்குள் ஒருமித்துக்கள் இல்லை.கருத்து வேறுபாடுகள்  அதிகரித்துள்ளன.அரசாங்கத்தினுள் குழப்பமான நிலை நிலவுகிறது.ஆனால் அரசியல் கட்சி என்ற வகையில் திருத்தம் தொடர்பாக எங்களின் நிலைப்பாடு தெளிவாக கூறப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.