Header Ads



இலங்கை வரலாற்றில் முதன்முறையாக...!


வருடாந்தம் ஒக்டோபர் 14ஆம் திகதி உலக முட்டைகள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. வரலாற்றில் முதன்முறையாக இலங்கையில் முட்டைகள் தினத்தை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அன்றைய தினம் 500 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தலா ஒரு போஷாக்குப் பொதி வழங்கப்படும் எனவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.


1996 ஆம் ஆண்டு வியன்னாவில் நடைபெற்ற IEC – மாநாட்டில் முதன்முறையாக முட்டைகளுக்கு ஒரு சர்வதேச தினத்தை ஒதுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.


அதன் பின்னர் ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் உலக முட்டை தினம் பல நாடுகளாலும் கொண்டாடப்படுகின்ற போதிலும் இலங்கையில் எந்த சந்தர்ப்பத்திலும் இந்த தினத்தை கொண்டாடும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.