Header Ads



இரட்டை குடியுரிமையுள்ள எம்.பி.மார்களைத் தேடி வேட்டை


அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டறிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் 225 பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் குடிவரவு,குடியகல்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அதன்படி கடந்த சில நாட்களாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் இது தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


இந்த விசாரணையில், தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு வந்தவர் இரட்டைக் குடியுரிமை பெற்றவர் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் அடையாளம் காட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.