Header Ads



70 இலட்சம் ரூபாய் மின்சாரக் கட்டணம் செலுத்தாத, ரூபவாஹினிக்கான மின்சார விநியோகம் இடைநிறுத்தம்


சுமார் 70 இலட்சம் ரூபாய் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமை காரணமாக ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கான மின்சார விநியோகத்தை இன்று (17) பிற்பகல் இடைநிறுத்துவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.


மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் அலைவரிசைகளின் தொடர்ச்சியான செயற்பாடுகளில் சிக்கல் ஏற்பட்டதாகவும் மின்பிறப்பாக்கிகள் மூலம் ஒளிபரப்புகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


பல மாதங்களாக மின் கட்டணத்தை செலுத்த ரூபவாஹினி தவறி இருந்ததாகவும், சுமார் 90 லட்சம் ரூபாய் நிலுவைத் தொகையில் சுமார் 20 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டதாகவும் தெரியவருகிறது.

No comments

Powered by Blogger.