Header Ads



40 பேர் ரணில் தலைமையில் அடுத்த தேர்தலில் போட்டியா..?


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 30 முதல் 40 பேர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அடுத்த தேர்தலில் போட்டியிட தயாராகி வருகின்றனர் என்றால், அது ஜனாதிபதியின் திறமை என ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.


பொதுஜன பெரமுனவில் இருந்து 30 முதல் 40 பேரை இணைத்துக்கொள்ள ஜனாதிபதி விரும்பினால், அனைவரையும் இணைத்துக்கொள்ளலாம்.


எனினும் 30 முதல் 40 பேரையும் இணைத்துக்கொள்ள ஜனாதிபதி விரும்ப மாடடார் என்பதே தனது தனிப்பட்ட கருத்து எனவும் திலும் அமுனுகம கூறியுள்ளார்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையிலான எதிர்கால அரசியல் பயணம் தொடர்பாக ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


பொதுஜன பெரமுனவின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான கூட்டணியில் கூட்டணியில் இணைய தயாராகி வருவதாகவும் இது சம்பந்தமாக அவர்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தி இணக்கத்திற்கு வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.


பொதுஜன பெரமுனவை சேர்ந்த ரொஷான் ரணசிங்க உட்பட முக்கியஸ்தர்கள் ஜனாதிபதியுடன் இணையலாம் என பேசப்படுகிறது.


அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன உட்பட அந்த கட்சியை சேர்ந்த சிலரும் ஜனாதிபதியுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.


இவர்களை தவிர 43 வது படையணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் ஜனாதிபதி தலைமையிலான கூட்டணியில் இணைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் தேர்தலில் இவர்கள் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.


No comments

Powered by Blogger.