Header Ads



எதிர்கட்சித் தலைவர் விதித்த 3 நிபந்தனைகள்


அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்துக்கு சில நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவு வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. 

22 ஆவது திருத்தம் தொடர்பான விவாதத்தில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இன்று இதனைத் தெரிவித்தார். 

நாம் ஆராய்ந்த விதத்தில் ஓப்பீட்டளவில் 20 ஆம் திருத்தத்தை விட 22 சில நல்ல விடயங்கள் உள்ளன. இதில் சில மாற்றங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

எனவே, 22 ஆவது திருத்தம் தொடர்பில் மிகவும் நேர்மையாக செயற்படுவதாயின் இந்த திருத்தத்துக்கு நாம் சில நிபந்தனைகள் அடிப்படையில் ஆதரவளிக்க தயாராக உள்ளோம். 

அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர்கள் நியமனத்தின்போது, பிரதமர், எதிர்கட்சித் தலைவரின் இணத்துக்கமைய, தெரிவு இடம்பெறவேண்டும். 

அத்துடன், இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் 22 ஆம் திருத்த சட்டமூல வரைவில் உள்ள சரத்தில் ஒரு துளியேணும் மாற்றம் ஏற்படக்கூடாது என்பதை நாம் வலியுறுத்துகிறோம். இதில் சிலரின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப திருத்தங்களை கொண்டுவர முயற்சித்தால் நாம் அதனை கடுமையாக எதிர்ப்போம்.

இரண்டரை வருடங்களில் நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி அதிகாரம் உள்ளதாக இந்த சட்டமூல வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதில் எந்த மாற்றமும் ஏற்படக்கூடாது. அது அவ்வாறே இருந்தால் நாம் ஆதரவு வழங்குவோம். 

அத்துடன், ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்ற ஒரு கோரிக்கையையும் நாம் முன்வைக்கிறோம். 

இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் நாம் ஆதரவளிக்க தயாராக உள்ளோம். எனவே, நாட்டை மேலும் வங்குரோத்து நிலைக்கு தள்ள நாம் ஆதரவு வழங்க தயாரில்லை. 

எக்காரணத்தைக் கொண்டும், இதில் மாற்றங்களை ஏற்படுத்த வர வேண்டாம். அந்தவகையில், மிகவும் நேர்மையாக, எதிர்க்கட்சி என்ற வகையில் ஐக்கிய மக்கள் சக்தி தமது ஆதரவை வழங்கும். எனினும், ஆளுங்கட்சிக்குள் இதற்குள் ஏதேனும் முரண்பாடுகள் ஏற்படுமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது என்றார்.

No comments

Powered by Blogger.