Header Adsசாரா தொடர்பான 3 வது DNA பகுப்பாய்வுகள் நிறைவு


(எம்.எப்.எம்.பஸீர்)


உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்­பான விசா­ர­ணை­களில் தொடர்ந்து மர்­ம­மாக உள்ள, நீர்­கொ­ழும்பு – கட்­டு­வ­பிட்­டிய தேவா­ல­யத்தில் தாக்­குதல் நடாத்­திய மொஹம்­மது ஹஸ்தூன் எனும் குண்­டு­தா­ரியின் மனை­வி­யான புலஸ்­தினி மகேந்ரன் எனும் சாரா­வுக்கு என்ன நடந்­தது என்­பது தொடர்பில் வெளிப்­ப­டுத்த 3 ஆவது தட­வை­யா­கவும் மீண்டும் டி.என்.ஏ. பரி­சோ­த­னை­களை முன்­னெ­டுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்ட நிலையில், அது குறித்த பகுப்­பாய்­வுகள் நிறை­வ­டைந்­துள்­ளன. இந் நிலையில் குறித்த மூன்­றா­வது டி.என்.ஏ. பகுப்­பாய்வு அறிக்கை விசா­ர­ணை­யா­ளர்­க­ளான சி.ஐ.டி.யின­ருக்கும், கல்­முனை நீதி­மன்­றுக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது.


கடந்த 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்­த­ம­ருது -வெலி­வே­ரியன் பகு­தியில் வீடொன்றில் குண்­டினை வெடிக்கச் செய்து தற்­கொலை செய்­து­கொண்­ட­தாக நம்­ப­ப்படும், சஹ்­ரானின் சகோ­தரர் ரில்வான் தலை­மை­யி­லான குழு­வி­ன­ரு­டைய உடற் பாகங்கள், அம்­பாறை பொது மயா­னத்தில் புதைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், அவை கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி மீள தோண்டி எடுக்­கப்­பட்­டன.


கல்­முனை நீதி­வா­னிடம் பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட உத்­த­ர­வுக்கு அமைய இவ்­வாறு உடற்­பா­கங்கள், அம்­பாறை நீதிவான் துஷாரா குமாரி தர்­ம­கீர்த்தி முன்­னி­லையில் இவ்­வாறு தோண்டி எடுக்­கப்­பட்­டன.


இதற்கு முன்னர் குறித்த உடற்­பா­கங்கள் தொடர்பில் பரி­சோ­த­னை­களை முன்­னெ­டுத்த சட்ட வைத்­திய அதி­கா­ரிகள், இவ்­வி­வ­கா­ரத்தில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த அனைத்து பொலிஸ் அதி­கா­ரி­க­ளுடன் அர­சாங்க இர­சா­யன பகுப்­பாய்­வாளர் திணைக்­கள அதி­கா­ரி­களும் இந் நட­வ­டிக்­கையின் போது பங்­கேற்­றி­ருந்­தனர்.


பலத்த பொலிஸ் பாது­காப்­புக்கு மத்­தியில் முன்­னெ­டுக்­கப்­பட்ட இந் நட­வ­டிக்­கையின் போது, அம்­பாறை மாந­கர சபையின் பெக்கோ இயந்­திரம் கொண்டு புதைக்கப்­பட்ட இடம் மீள தோண்­டப்­பட்ட நிலையில், அரச இர­சா­யன பகுப்­பாய்­வாளர் மற்றும் சட்ட வைத்­திய அதி­கா­ரி­களின் வழி நடாத்­தலில் உடற் பாகங்கள், கறுப்பு நிற பாது­காப்பு பைக­ளுடன் எடுக்­கப்­பட்­டது. பின்னர் சட்ட வைத்­திய அதி­கா­ரிகள் தேவை­யான மாதி­ரி­களைப் பெற்­றுக்­கொண்­டனர். இந் நட­வ­டிக்­கைகள் அனைத்தும் பொலிஸ் ஸ்தல தட­ய­வியல் பிரி­வி­னரின் பங்­கேற்­புடன் இடம்­பெற்­றன. இந் நிலை­யி­லேயே இந்த உடற் பாகங்கள் மூன்­றா­வது டி.என்.ஏ. பரி­சோ­த­னை­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக கொழும்­புக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டன. அதன்­படி அரச இர­சா­யன பகுப்­பாய்­வாளர் திணைக்­க­லத்தில் முன்­னெ­டுக்­கப்பட்ட டி.என்.ஏ. பரி­சோ­த­னைகள் நிறை­வ­டைந்து அதன் பெறு­பேறு அடங்­கிய பகுப்­பாய்வு அறிக்கை, நீதி­மன்­றுக்கும், விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கும் அனுப்பி வைக்­கப்பட்­டுள்­ள­தாக அரச இர­சா­யன பகுப்­பாய்வு திணைக்­கள தக­வல்கள் தெரி­வித்­தன.


கடந்த 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்­த­ம­ருது -வெலி­வே­ரியன் பகு­தியில் வீடொன்றில் மறைந்­தி­ருந்த பயங்­க­ர­வா­திகள், பாது­காப்பு படை­க­ளு­ட­னான மோத­லி­னி­டையே குண்­டினை வெடிக்கச் செய்து தற்­கொலை செய்­து­கொண்­டி­ருந்­தனர்.


இதன்­போது அங்கு மொத்­த­மாக 19 பேர் இருந்­த­தாக தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டன. எனினும் சஹ்­ரானின் மனை­வியும் அவ­ரது ஒரு குழந்­தையும் உயி­ருடன் மீட்­கப்­பட்­டனர். எனினும் முன்­னெ­டுக்­கப்­பட்ட ஸ்தல பரி­சோ­த­னை­களின் போது அடை­யாளம் காணப்­பட்ட உடற்­பா­கங்கள் மீது முன்­னெ­டுக்­கப்­பட்ட டி.என்.ஏ. பரி­சோ­த­னை­களின் போது, 16 சட­லங்­களே அடை­யாளம் காணப்­பட்­டி­ருந்­தன. இந் நிலை­யி­லேயே அங்­கி­ருந்த சாரா எனும் பயங்­க­ர­வாதி தப்­பித்­துள்­ள­தாக தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டன.


இந்த குண்­டு­வெ­டிப்பு தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளி­லேயே சாரா தொடர்பில் முதலில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டன. குறிப்­பாக கட்­டு­வா­பிட்­டிய தேவா­லய குண்­டு­வெ­டிப்பு சம்­ப­வத்தின் குண்­டு­தா­ரியின் மனைவி என அடை­யாளம் காணப்­பட்ட சாரா, அந்த குண்­டு­தா­ரியை காத­லித்து மதம் மாறி திரு­மணம் செய்­தி­ருந்தார்.


சட்டத் தேவைக்­காக சாய்ந்­த­ம­ருது வீட்டில் தற்­கொலை செய்­து­கொண்டு உயி­ரி­ழந்த பயங்­க­ர­வாத கும்­ப­லைச்­சேர்ந்­த­வர்­களின் ஆள் அடை­யா­ளத்தை நிரூ­பிக்க, சஹ்­ரானின் மனைவி ஹாதி­யாவின் வாக்கு மூலத்­தினை அடிப்­ப­டை­யாக கொண்டு டி.என்.ஏ. பரி­சோ­த­னைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. அதா­வது, சம்­பவ இடத்­தி­லி­ருந்து ஸ்தல தட­ய­வியல் பிரி­வி­னரால் அடை­யாளம் காணப்­பட்டு மீட்­கப்­பட்ட உயி­ரியல் கூறுகள், குண்டு வெடிக்கச் செய்யும் போது வீட்டில் இருந்­த­வர்கள் என சஹ்­ரானின் மனைவி ஹாதி­யாவின் வாக்கு மூலத்தில் குறிப்­பி­டப்­பட்­ட­வர்­களின் இரத்த உற­வு­க­ளிடம் பெறப்­பட்ட உயி­ரியல் கூறு­க­ளுடன் ஒப்­பீடு செய்­யப்­பட்­டன.


இதன்­போது ஹாதி­யாவின் வாக்கு மூலத்தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த அனை­வ­ரி­னதும் டி.என்.ஏ.க்கள் கண்­ட­றி­யப்­பட்டு அவர்­க­ளது இறப்பு அறி­வியல் ரீதியில் உறுதி செய்­யப்­பட்ட போதும், ஹாதியா பெயர் குறிப்­பிட்ட சாரா தொடர்பில் மட்டும் டி.என்.ஏ. பரி­சோ­த­னைகள் தோல்­வி­ய­டைந்­தன. (ஹாதி­யாவின் வாக்கு மூலத்தை தவிர வேறு சுயா­தீ­ன­மான சாட்­சிகள் ஊடா­கவும் அவ்­வீட்டில் இருந்­த­வர்கள் யார் என்­பதை விசா­ர­ணை­யா­ளர்கள் கண்­ட­றிந்­தி­ருந்­தனர்)


இத­னை­ய­டுத்து அது குறித்து விஷேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. சாராவின் தாயின் டி.என்.ஏ. மாதி­களை பெற்றே, சம்­பவ இடத்­தி­லி­ருந்த உயி­ரியல் கூறு­க­ளுடன் அது ஒப்­பீடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.


இந் நிலையில் சாய்ந்தமருது வீட்டில் குண்டு வெடிக்கச் செய்யும் போது சாரா அங்கிருந்ததாக சஹ்ரானின் மனைவி ஹாதியாவின் கண்கண்ட சாட்சியும், சாரா சாய்ந்­த­ம­ருது வீட்­டுக்கு சென்­ற­மைக்­கான அறி­வியல் தட­யங்­களும் இருக்கும் நிலையில், குண்டு வெடிப்பின் பின்னர் அவ­ருக்கு என்ன ஆனது என்ற தெளி­வான விம்பம் இது­வரை விசா­ர­ணை­யா­ளர்­க­ளிடம் இல்லை.


இவ்­வா­றான நிலை­யி­லேயே ஏற்­க­னவே இரு முறை செய்­யப்­பட்ட டி.என்.ஏ. பரி­சோ­த­னை­க­ளுக்கு மேல­தி­க­மாக மீளவும் டி.என்.ஏ. பரி­சோ­த­னை­க­ளுக்­கான நீதி­மன்ற அனு­மதி பெறப்­பட்டு உடற் பாகங்கள் தோண்டி எடுக்­கப்­பட்டு, இர­சா­யன பகுப்­பாய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli

No comments

Powered by Blogger.