Header Ads



100 சிறுவர்களை பலியெடுத்த இருமல் பாணி இலங்கையில் உள்ளதா..??


இந்தோனேஷியா மற்றும் கம்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 100க்கும் அதிகமான சிறார்களின் உயிர்களை காவுக் கொண்ட பாணி மற்றும் திரவ மருந்துகள் நாட்டில் பயன்பாட்டில் இல்லை என தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


ஒளடதங்களை பதிவு செய்யும் போது மருந்து கட்டுப்பாடு அதிகார சபையினால் அமுல்படுத்தப்படும் கடும் சட்டங்களுக்கு மத்தியில் தரங்கூடிய மருந்துகள் மாத்திரமே நாட்டிற்கு இறக்குமதி செய்ய அனுமதி கிடைக்கப்பெறும் என அந்த சங்கத்தின் பொருளாளர் மஞ்சுள ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.


இருமலுக்காக பயன்படுத்தப்பட்ட பாணி மருந்து காரணமாக கம்பியாவில் 70 சிறார்கள் உயிரிழந்தனர்.


இதனையடுத்து, பாணி மற்றும் திரவ மருந்துகளை அருந்திய இந்தோனேஷியாவைச் சேர்ந்த 100க்கும் அதிகமான சிறார்கள் உயிரிழந்தனர்.


சில திரவ மருந்துகளில் சிறுநீரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற இராசயனப் பொருள் அடங்குகின்றமை இந்தோனேஷிய அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.


குறித்த ஒளடதங்களை பெற்றுக் கொண்ட 200 சிறார்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் அவர்களுக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.