Header Ads



மத ஸ்தலங்களுக்கு மின்சாரம் வழங்க தனியான மின் உற்பத்தி நிலையங்கள் இல்லை - அமைச்சரின் காரசாரமான பதில்


மத ஸ்தலங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கு இலங்கையில் தனியான மின் உற்பத்தி நிலையங்கள் இல்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக எரிசக்தியை முகாமைத்துவம் செய்ய வேண்டியதன் காரணமாகவே மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தற்போது மத வழிபாட்டுத் தலங்களுக்கான சோலார் பேனல் அமைப்பைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.


பணம் செலுத்தும் முறையில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டால், வழிபாட்டுத் தலங்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் சிக்கல் இருக்காது என்றும் அவர் கூறினார்.


பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


எனினும், சமய ஸ்தலங்களுக்கு ஏதாவது சலுகை முறையைக் கடைப்பிடிக்குமாறு திறைசேரியின் ஆலோசனைகள் கிடைத்தால் அதற்கேற்ப செயற்படத் தயார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

-சி.எல்.சிசில்-


1 comment:

  1. இவருடைய பதில் மிகவும் ஆழமான ஓர் உண்மையை இந்த நாட்டு மக்களுக்கு தௌிவாகக் காட்டுகின்றது. அதாவது பொதுமக்களின் குறிப்பாக மதத்தலைவர்களின் கருத்துக்களைக் கேட்கக் கூட இந்த நாட்டு அரசியல்வாதிகள் தயாராக இல்லை. அதன் நேரடிவிளைவை மிக அண்மையில் கண்டும் கூட அது விளங்காத மந்தி(ரி)களாக இருப்பது மிகவும் வேதனையளிக்கின்றது.

    ReplyDelete

Powered by Blogger.