Header Ads



துருக்கி முதலீட்டாளர்களை கவர்ந்திழுக்கத் திட்டம் - களத்தில் குதித்த பிரதமர்


இலங்கையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தளர்த்தப்பட்ட விசா விதிமுறைகள் மற்றும் முதலீட்டுச் சபையின் முதலீட்டு வசதித் திட்டங்கள், முதலீடுகளை மேலும் மேற்கொள்ள துருக்கிய முதலீட்டாளர்களை ஈர்க்க உதவும் என பிரதமர் தினேஷ் குணவர்தன உறுதியளித்துள்ளார்.


துருக்கியின் தூதுவர் ரகிபே டிமெட் Rakibe Demet வெள்ளிக்கிழமை பிரதமரை சந்தித்தார். நீண்டகால குடியிருப்பு விசாவைப் பெறுவதில் துருக்கிய வர்த்தகர்கள் சிலர் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து கலந்துரையாடவதற்காக இடம்பெற்ற இந்த சந்திப்பின் போதே பிரதமர் தினேஷ் குணவர்தன இவ்வாறு குறிப்பிட்டார்.


இந்த புதிய நடைமுறை முதலீட்டு ஊக்குவிப்பு யோசனை மூலம் முதலீட்டாளர்களை அதிகளவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான வாய்ப்பு கிட்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.


விவசாய இயந்திரங்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மீன்வளத் துறைகள் போன்ற புதிய துறைகளில் முதலீடு செய்ய துருக்கிக்கு இப்போது வாய்ப்புகள் இருப்பதாக பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.


மருந்து மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களை தமது நாடு ஏற்கனவே இலங்கைக்கு வழங்கியுள்ளதாகவும் மேலும் இரண்டு மருத்துவ உதவிப்பொருட்கள் அடுத்த வாரம் இலங்கைக்கு கொண்டுவரப்படவிருப்பதாகவும் துருக்கிய தூதுவர் இதன்போது தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.