Header Ads



கத்தாரில் கல்குடா சமூக நிறுவனம் அங்குரார்ப்பண நிகழ்வு.


- எஸ்.எம்.எம். முர்ஷித் -


கல்குடா சமூக நிறுவனத்தின் (கத்தார்) அங்குரார்ப்பண நிகழ்வு ஸ்டெபேர்ட் சிறி லங்கன் ஸ்கூலில் (தோஹா) மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.


கல்குடாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி கத்தாரிலுள்ள பாடசாலைஇ மத்ரஸாக்களின் பழைய மாணவர் சங்கக்கிளைகள்இ நலன்புரி அமைப்புக்கள்இ விளையாட்டுக்கழகங்களின் நிருவாகிகள்இ பிரதிநிதிகள்இ அங்கத்தவர்கள் மற்றும் அமைப்பு சாராத சகோதரர்கள் எனப்பலர் இதில் கலந்து கொண்டனர்.


அறிமுக உரையினை வாழைச்சேனை அன்னூர் தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க கத்தார் கிளை சார்பாக முஹம்மது முஸம்மில் நிகழ்த்தினார்.


அவரது உரையில்இ கல்குடாவுக்கும் கத்தாருக்குமான தொடர்புஇ இலங்கையர்களுக்கான பொது அமைப்பின் தேவைப்பாடு கருதி மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புக்கள்இ அதன் தொடரில் கல்குடா சகோதரர்களை ஒன்றிணைக்க எடுத்த முயற்சிகள் தொடர்பிலும் அதன் தொடரில் கல்குடா சமூக நிறுவனத்தின் (கத்தார்) உருவாக்கத்திற்கான அடித்தளமிடப்பட்டு யாப்புக்குழு நிர்ணயம் வரை வரலாற்றை இரத்தினச்சுருக்கமாக முன்வைத்தார்.


அறிமுகவுரையினைத் தொடர்ந்து யாப்புக்குழுவின் பொறுப்பாளர் சகோதரர் ஏ.ஏ.எம்.பஸ்லினால் யாப்பு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.


யாப்புக்குழு நியமிக்கப்பட்டது முதல் யாப்பு அங்குரார்ப்பண நிகழ்வு வரை இடம்பெற்ற யாப்புக்குழுவின் ஒன்றுகூடல்கள்இ நிகழ்வுகள்இ மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான ஆவணக்காணொளி வெளியீடு இடம்பெற்றது.


அதனைத்தொடர்ந்து யாப்பு அறிமுக உரையினை அவுஸ்திரேலியாவிலிருந்து டாக்டர். எஸ்.சித்தீக் ஓடியோ மூலம் சபையோருக்கு சமர்ப்பித்தார்.


அதில் யாப்பினை உருவாக்க காலம் எடுத்துக்கொண்டமைக்கான காரணங்கள்இ எதிர்கொண்ட சிரமங்கள்இ யாப்புக்குழுவின் அர்ப்பணிப்புஇ தியாகங்கள் தொடர்பில் சிலாகித்து கருத்துக்களைப் பகிர்ந்திருந்தார்.


அதனைத்தொடர்ந்துஇ யாப்பின் உள்ளடக்கம் தொடர்பில் அதற்கென பொறுப்பளிக்கப்பட்ட சகோதரர்களால் சபையோருக்கு சமர்ப்பிக்கப்பட்டது.


இதில்இ ஓட்டமாவடி மத்திய கல்லுரி (தேசிய பாடசாலை) பழைய மாணவர் சங்கக்கிளை சார்பாக எம்.பி.எம்.இஸ்ஸத் விஷேட உரையாற்றினார்.


அவர் தனதுரையில்இ ஒற்றுமைஇ வைராக்கியம்இ பொறுமையுடன் பயணித்தால் யாப்பு குறிப்பிடும் இலக்கினை அடைந்து கொள்ள முடியுமாக இருக்கும். அதற்காக அனைத்து சகோதரர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தினார்.


கல்குடா சமூக நிறுவனம்-கத்தாரின் யாப்பு அங்குரார்ப்பண சரத்துக்கமைவாக நிருவாகிகளாக கல்குடாவை பிரதிதிநிதித்துவப்படுத்தி கத்தாரில் இயங்கும் அமைப்புக்களின் பிரதிநிதிகளிலிருந்து யாப்புக்குழுவுக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுடன் சேர்த்து புதிதாக இணைந்த அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இணைந்ததாக பரீட்சார்த்த நிருவாக சபை ஒரு வருட காலத்திற்கு இயங்கி ஒரு வருட இறுதியில் இடம்பெறும் வருடாந்தாப் பொதுக்கூட்டத்தில் புதிய நிருவாக சபை தெரிவு இடம்பெறும். இதற்கான ஒப்புதல் சபையில் பெறப்பட்டது.


அத்துடன்இ சபையோரிலிருந்து சகோதரர் றணீஸ்இ ஜவாத்இ சுதைஸ் அஹமட் ஆகியோரின் ஆக்கபூர்வமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

 

சகோதரர் ஆரிப் மெளலானாவின் நன்றியுரையில் நிகழ்வுக்கு மண்டபத்தை ஒதுக்கித்தந்த ஸ்டெபேர்ட் சிறி லங்கன் ஸ்கூல் தோஹா நிருவாகம் மற்றும் அதற்கான ஒழுங்குகளைச் செய்து தந்த கத்தார் அவ்காப் ஆலோசகர் சகோதரர் அல்-ஹாஜ் முறாத் அன்வர்இ லோகோ வடிவமைப்புக்கு உதவிய சகோதரர் அர்ஷாத் அஷ்ரப்இ ஆவணக்காணொளியினை தயார்படுத்தித் தந்த சகோதரர் சுஜாஇ காட்சிப்பதாதையை அழகான முறையில் வடிவமைத்துத் தந்த சகோதரர் உவைஸ்தீன்இ சட்ட ஆலோசனைஇ மேற்பார்வை செய்த சட்டத்தரணி எம்.எச்.பாறுக் (எல்.எல்.பி)இ திருத்த மேற்பார்வை செய்த ஆர்.அப்துல்லாஹ் அஷாம்இ பிரதான நிகழ்வின் பொது சமையலாளராக உதவி புரிந்த எம்.நாஸர் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்ததுடன்இ அங்குரார்ப்பண நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது இதில்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பினை சகோதரர் ஏ.ஜி.ஹணீஸ் வெகு நேர்த்தியாக செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.