Header Ads



கோட்டாவின் பேனா - விலையும், மறைந்திருக்கும் சுவாரஸ்யங்களும்


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையில் இருக்கும் பேனா வெறும் பார்வைக்கு சாதாரண ஒரு பேனாவாகத் தெரியும் , ஆனால் இந்த பேனாவுக்குப் பின்னால் யாருக்கும் தெரியாத ஒரு ஆச்சரியம் மிக்க கதை இருக்கிறது . முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவிக்கு கையொப்பமிட்டதில் இருந்து பதவி விலகும் நாள் வரை ஒரே பேனாவைப் பயன்படுத்தினார். இந்த பேனாவில் பல இரகசியங்கள் அடங்கியுள்ளன.


இது உலகின் விலையுயர்ந்த பேனாக்களில் ஒன்று, இந்த பேனாவின் சராசரி விலை 490 டொலர்கள். கோட்டாபய ராஜபக்ஷ வின் வேண்டுகோளின் பேரில், இந்த பேனா 24 கேரட் தங்கத்தில் Montblanc நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இலங்கை நாணயத்தில் கிட்டத்தட்ட 02 மில்லியன் செலவில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக ஜேர்மனியின் ‘த ஸ்பீக்கர்’ சஞ்சிகை குறிப்பிட்டிருந்தது.


இரண்டாவது விஷயம் மிகவும் சுவாரஸ்யமானது. இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான இந்தப் பேனாவை கோட்டாபய ஜனாதிபதி பதவியில் கையெழுத்திடுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் அனுராதபுரத்தில் உள்ள ஞானா அக்காவின் கோவிலுக்குச் சென்று, இந்த பேனாவில் கையெழுத்திடும் ஒவ்வொரு வேலையையும் வெற்றிகரமாக செய்யுமாறு வேண்டிக் கொண்டார். கோட்டா ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் சகல அரசாங்க அலுவல்களுக்கும் இந்த பேனாவால் கையொப்பமிட்டிருந்த போதிலும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்ட போது மட்டும் ஏன் இந்த பேனா பயன்படுத்தப்படவில்லை என்பது இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது.

நன்றி -மவ்ரட்ட

1 comment:

  1. ஆழமான அறிவும், தூரதிருஷ்டியும், பரந்த அரசியல் ஞானமும் இல்லாத கொள்ளைக்கார அரசியல்வாதிகள் தனது பதவியைத் தக்கவைத்துக் கொள்ள ஆரம்பமாகவும் இறுதியாகவும் சென்றடையும் ஒரே இடம் மந்திரகாரன்/மந்திரகாரிகளின் புகலிடமாகும். இந்த சமாச்சாரம் விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் முன்னேறியுள்ள இந்த காலத்தில் பிற்போக்கானது, இறுதியில் தோல்வியைக் கொண்டு வரும் என்ற உண்மையில் இந்த கொள்ளைக்காரர்களுக்கு கிஞ்சித்தும் நம்பிக்கை இல்லை. அதன் விளைவை இவ்வளவு அவசரமாக கோதா நந்தசேன அவருடைய ஞானக்காவின் மந்திரத்தால் கிடைத்தது அவமானமும், கேவலமும்தான் என்பதை இன்னமும் நந்தசேனாவுக்கு விளங்கிக் கொள்ள முடியாமை இந்த நாட்டு மக்களுக்கு மிகப் பெரும் துரதிருஷ்டமாகும். பலஸ்தீன முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணி, இடத்தை பலாத்காரமாக கைப்பற்றிக் கொண்டு சூழவுள்ள அத்தனை அரபு நாடுகளையும் அச்சுறுத்திக் கொண்டு அநியாயமாக அந்த மனிதர்களையும் அவர்களுடைய சொத்துக்களையும் அழித்து அவர்களை நிர்மூலமாக்கும் திட்டத்துடன் இயங்கும் இஸ்ரவேல் அதன் அத்தனை திட்டங்களையும், இலக்குகளையும் வெற்றிகரமாக செயல்படுத்த முற்றும் முழுதாக நம்பியிருப்பது வளர்ச்சியடைந்து வரும் விஞ்ஞான தொழில் நுட்பம்தான். மிகக் குறுகிய நிலப்பரப்பைக் கொண்ட இஸ்ரவேல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயம், தொழில் நுட்பத் துறையில் அபாரமுன்னேற்றத்தை அடைந்து வருகின்றது. இஸ்ரவேலின் முன்னேற்றத்தின் இரகசியம் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் தான். ஆனால் தொழில்நுட்பம் என்ற பெயரில் மந்திரத்தால் எதையும் சாதிக்கலாம் என ஆட்சி செய்யும் எந்த ஒரு நபரும் உலகில் எதனையும் சாதிக்கவில்லை. அவர்களுக்கு இறுதியில் கிடைப்பது கேவலமும் அவமானமும் மட்டும்தான் என்பதை இன்றைய உலகில் பல நாடுகள் மிகச் சிறப்பான உதாரணங்களாக காணப்படுகின்றன. ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த உண்மைகளைப் பார்த்து யாரும் பாடம் படித்துக் கொள்ளத் தயாராக இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.