Header Ads



காகம் கூட அமெரிக்கா செல்கிறது, கோட்டாபய திரும்பி வருகிறார் - போரடியவர்கள் சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள்


தற்போதைய ஜனாதிபதி ராஜபகசர்ளுக்கு கடன்பட்டிருந்தாலும்,ஐக்கிய மக்கள் சக்தியோ அல்லது ஐக்கிய மக்கள் கூட்டணியோ ராஜபக்சர்களுக்கு கடன்பட்டிருக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.


ராஜபக்சர்களின் அல்லது அரசாங்கத்தின் கடனை செலுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு தேவைப்பாடு இல்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்நாட்டின் இருநூற்றி இருபது இலட்சம் மக்களின் கடனை அடைத்து அவர்களின் வாழ்வை சிறப்புறச் செய்யும் தேவைப்பாடு மாத்திரமே ஐக்கிய மக்கள் சக்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


இந்நாட்டை வக்குரோத்தாக்கிய காக்கை கூட சுதந்திரமாக அமெரிக்கா செல்கிறது எனவும், இந்நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைந்து விரட்டியடித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் இலங்கைக்கு திரும்பியுள்ளதாகவும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அவர்கள் அந்த சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் போதே இந்நாட்டின் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட லஹிரு மற்றும் தமிதா போன்றோரை அரசாங்கம் சிறைக்கு  அனுப்பிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.


அன்று இந்நாட்டில் அடக்குமுறையை ஆரம்பித்தவர்கள் மஹிந்த ராஜபக்சவுக்காக அலரி மாளிகையில் திரண்ட குண்டர்கள் தான் என நினைவு கூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர், அவர்கள் அனைவரும் இன்று சுதந்திரமாக நடமாடுவதாகவும் அவர் தெரிவித்தார்.


களுத்துறை மாவட்டத்தின்,பாணந்துறை தேர்தல் தொகுதியில் இன்று (10) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


சர்வதேச நாணய நிதியம் கூட இலங்கையில் ஒரு புதிய மக்கள் அபிப்பிராயம் உருவாக  வேண்டும் என அறிவித்துள்ள நிலையில், அரசாங்கம் மொட்டுவின் 134 பேரின் அபிப்பிராயத்திற்கு அடிபணிந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.


ஒட்டுமொத்த நாட்டு மக்களும் ஒன்றிணைந்து பொதுப் போராட்டத்தின் மூலம் ஜனாதிபதியையும் பிரதமரையும் விரட்டியடித்ததாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஆனால் அதற்கு பதிலாக மொட்டுவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதியொருவரே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


எனவே,தற்போதைய ஜனாதிபதி மொட்டுக்கு தனது நன்றிக் கடணை நிறைவேற்றி வருவதாகவும், மக்களுக்கு ஆற்ற வேண்டிய தமது கடமைகளை மறந்து விட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


ராஜபக்சர்கள் கூறும் விதத்தில் கூலிக்கு கூச்சலிடும், ராஜபக்சர்களின் அறிவுறுத்தலின்படி செயற்படும் தரப்பினர் கடந்த காலங்களில் எதிர்க்கட்சியில் இருந்திருக்கலாம் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இன்று அவ்வாறானவர்கள் எதிர்க்கட்சியில் இருப்பதாக நினைத்தால் அது ராஜபக்சர்களுக்கு நேர்ந்துள்ள தவறுதலொன்று எனவும் அவர் தெரிவித்தார்.

1 comment:

  1. இந்த நபர் கைகை உயர்த்திக் காட்டிக் கொண்டு அதற்காக ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பேசிப் பேசித் திரிந்தால் நாட்டை முன்னேற்றத்துக்குக் கொண்டுவரலாம் எனக்கனவு காண்கின்றார். கள்ளர்கள் அல்லாத, நாட்டை வழிநடாத்தும் வியூகங்கள் என்ன அவற்றை எவ்வாறு சிறப்பாக செயற்படுத்தலாம் என்பது பற்றிய ஞானமோ விவேகமோ இல்லாத நபர்களால் நாட்டுக்கு எந்தப் பிரயோசனமுமில்லை.

    ReplyDelete

Powered by Blogger.