Header Ads



ஆளுநரை வெளியேற்ற யாரேனும் விரும்பினால், அதற்குப் பதிலாக நான் செல்லத் தயார் - அலி சப்ரி


நிதியமைச்சராக பதவி வகித்த காலத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளுக்கும் பொறுப்பேற்க தான் தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவித்துள்ளார். 


மத்திய வங்கியின் நடவடிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக அலி சப்ரி இன்று - 02- நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.


இதன்போதே அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளதுடன் மேலும் தெரிவிக்கையில், 

மத்திய வங்கியின் ஆலோசனையின் பேரில் நாட்டின் கடன் கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்படும் என்ற அறிவிப்பு நாடாளுமன்றத்திற்குத் தெரிவிக்கப்படவில்லை என்றோ அல்லது அந்த நடவடிக்கைகளின் மூலம் ஏதேனும் பாதகம் ஏற்பட்டதாகவோ இந்தச் சபையில் யாராவது நினைத்தால் அந்த முடிவுகளுக்கான ஒட்டுமொத்த பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.


மத்திய வங்கியின் ஆளுநரை வெளியேற்ற யாரேனும் விரும்பினால், அதற்குப் பதிலாக நான் செல்லத் தயார். அவரது முடிவுகளால் இன்று மக்கள் பயனடைகின்றனர்.


இதுபோன்ற துணிச்சலான முடிவுகளை எடுக்கக் கூடியவர்களை வைத்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.