Header Ads



மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கப்படும்: நாமல் தெரிவிப்பு


மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கப்படுமென முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார். 

வன்முறையை  முன்னெடுப்பவர்கள், சமூக ஊடகங்களில் வன்முறையை தூண்டுபவர்கள் மீது  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சட்டத்தை பிரயோகித்திருந்தால், இன்று இதனை விட நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும். எனினும், ரணில் விக்ரமசிங்க  அதனை மேற்கொள்வதையிட்டு மகிழ்ச்சியடைவதாக நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார். 


தமது அரசியல் கட்சியின் பலம் தாம் எதிர்பார்க்காத வகையில் அழிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஸ, அமைப்பு முறைமையை (System) மாற்றுவதாகக் கூறி ஆட்களை மாற்றியதுதான் தமது கட்சி செய்த தவறு எனவும் குறிப்பிட்டார். 


நாட்டின் பெற்றோரும் பிள்ளைகளும் ஒன்றிணைந்தால், அமைப்பு முறையில் மாற்றம் கண்ட நாட்டினை கட்டியெழுப்ப முடியும் என அவர் கூறினார். 


அவ்வாறான யுகத்திற்கு நாட்டைக் கொண்டு செல்வதற்கு அவசியமான தலைமைத்துவத்தை பொதுஜன பெரமுன என்ற ரீதியில் பெற்றுத் தருவதாகவும் அவர் தெரிவித்தார். 


புதிய கூட்டணியை மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் கட்டியெழுப்பவுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஸ மேலும் கூறினார். 

2 comments:

  1. நாட் டைக் குட்டிச் சுவராக்கி, எஞ்சியுள்ள சொத்துக்களையும் நாட்டின் கொள்வனவு செய்யும் அடிப்படை தேவைகளையும் கொண்டு சுரண்டுவதும் கொமிஸ்அடிப்பதும் தான் பொஹொட்டுவ கட்டியின் ஸ்தாபித்தவர்கள் அதன் அடிவருடிகள் அனைவரின் ஒரே நோக்கம் கொமிசன் அடிப்பதும் வளங்களைச் சுரண்டுவதும் தவிர வேறு ஒன்றுமில்லை. எனவே இந்த நாட்டின் இளம் தலைமுறையினருக்கு நிச்சியம் ஒரு எதிர்காலம் இல்லை என்ற கவலையான செய்தியை மட்டும் தௌிவாகக் கூறலாம்.

    ReplyDelete
  2. Another try to get back to ride.

    ReplyDelete

Powered by Blogger.