Header Ads



இனவாதப் பெயர்களைக் கொண்ட கட்சிகளை, தீவிரவாதிகளாகக் கருத வேண்டும் - செளரதன தேரர்


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நல்ல இணக்கம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜனசெத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லை செளரதன தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கடிதம் ஒன்றை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


இனவாதப் பெயர்களைக் கொண்ட கட்சிகளை தீவிரவாதிகளாகக் கருத வேண்டும் எனவும், அவ்வாறான கட்சிகள் இருந்தால், அவற்றைத் திருத்தம் செய்து, இனவாதமற்ற கட்சிகளாகப் பதிவு செய்ய வேண்டும் என கோரியே இந்த கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.


இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேரர், நாட்டில் அரசியல் கட்சிகளின் பதிவுகள் வெகுவாக அதிகரித்துள்ளதாகவும், இக்கட்சிகள் மக்களுக்கு எந்த சேவையையும் வழங்கவில்லை எனவும் தெரிவித்தார்.  

No comments

Powered by Blogger.