Header Ads



'நரக நெருப்பு' என்ற பெயரில் தாமரை கோபுர இசை நிகழ்வு, கொழும்பு மேயர் கடும் எதிர்ப்பு - சாத்தானை ஊக்குவிக்க அல்ல என்கிறார் ஏற்பாட்டாளர்


பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட தாமரை கோபுரத்திற்கு அருகில் நாளையதினம் -30- நடைபெறவுள்ள இசை விழாவிற்கு 'ஹெல்ஃபயர்' என்ற பெயர் பயன்படுத்தப்படுவதற்கு கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


இந்த இசை நிகழ்ச்சிக்கு கொழும்பு மாநகர சபை அனுமதி வழங்கியுள்ள போதிலும் 'ஹெல்ஃபயர்' என்ற பெயரைக் காட்சிப்படுத்த வேண்டாம் என ஏற்பாட்டாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.


எனவே அந்த நிகழ்வின் பெயரை மாற்றுமாறு அவர் ஏற்பாட்டாளர்களை வலியுறுத்தினார்.


தமது நகரத்தில் ஒரு நரக நெருப்பு கச்சேரியை தாம் பார்க்க விரும்பவில்லை என்று அவர் ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


இந்த பெயருக்கு கடும் எதிர்ப்பு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.


எனினும் இசை விழா சாத்தானை ஊக்குவிக்கும் முயற்சி அல்ல என்று நிகழ்வின் ஏற்பாட்டாளர் தோர்ஸ் தெரிவித்துள்ளார்.


இசை நிகழ்வின் நோக்கத்தில் பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.


இந்தநிலையில் நிகழ்வில் 'ஹெல்ஃபயர்' என்ற பெயர் விளம்பரப்படுத்தப்படக் கூடாது என்ற நிபந்தனையின் பேரிலேயே அதனை நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநரக ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.