Header Ads



இலங்கையில் அரச பயங்கரவாதம், வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பாதீர்கள் என பொன்சேக்கா கோரிக்கை


அரச பயங்கரவாதம் செயற்படும் நாடாக இருக்கும் இலங்கைக்கு பணம் அனுப்புவதை தவிர்க்குமாறு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் கோரிக்கை விடுப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா நேற்று (31) வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.


“இந்த அரச பயங்கரவாதம் நிறுத்தப்படும் வரை ஒரு பைசா கூட இந்த நாட்டிற்கு அனுப்ப வேண்டாம் என்று வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாங்கள் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் பசியால் சாகும் நிலையில் இருந்தாலும் ஐந்து காசு கூட அனுப்ப வேண்டாம். இந்த அரசுக்கு உதவாதீர்கள்.


IMF இல் என்ன கிடைக்கிறதோ அதுவே கிடைக்கும் என்றார். இந்த அரச பயங்கரவாதம் இருந்தால், இந்த உதவிகளுக்கு நாம் தகுதியானவர்களா இல்லையா என்ற கேள்வி எழுகிறது என்றார்.

1 comment:

  1. பொன்சேகாவின் உரையில் எந்த நடுநிலைமைத் தன்மைகளும் இல்லை. மூடத்தனமாக பேசி நாட்டு மக்களையும் வௌிநாட்டில் வாழும் இலங்கையர்களையும் வழிகெடுக்கும் வகையில் பேசிவிட்டால் நாட்டில் இருக்கும் நெருக்கடியும், பிரச்சனைகளும் தீர்ந்து விட்டதா? 225 ல் ஒரு கழுதையாகத் தான் இதுவும் தெரிகிறது. பொதுமக்களுக்கு தெவிபிஹிடய். அவ்வளவுதான்.

    ReplyDelete

Powered by Blogger.